உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கலைஞர் காங்கிரசின் துணைத் தலைவர்; மூன்றாவதாக அண்ணா அமர்ந் திருக்கிறார். தேசியக் கொடியைப் பெரியார் கொளுத்தப்போவதாக அறிவித்ததையொட்டி, தேசியச் சின்னங்களைப் பாதுகாக்க ஒரு கடுமையான சட்டம் சட்டப் பேரவையில் - காங்கிரசு அரசாங்கத்தினரால் கொண்டு வரப்படுகிறது; அப்போதும் அண்ணா பெரியாரை விட்டுக் கொடுக்கவில்லை- 'பெரியார் அறிவிப்பையொட்டி இப்படி ஒரு சட்டம் கொண்டுவரத் தேவையில்லை; பெரியாரிடம் நெருக்கமாக இருக்கின்ற காமராசர் அவரோடு பேசியே இதனைத் தீர்த்துக்கொள்ளலாம்” என்று பேரவையில் கருத்து மழை பொழிந்தார். 66 இந்தச் சட்டத்தின் வாயிலாகப் பெரியாரை அடக்கி விடவேண்டும்” என்று முனைந்தவர்களுக்குத் துணைபோக- அண்ணா தயாராக இல்லை! - நேரு தி.மு.கழகத்தின் மும்முனைப் போராட்டத்தில் ஒரு போராட்டம் - 'பண்டித அவர்கள் - பெரியார், சிலம்புச் செல்வர் போன்றவர்களைச் சுடுசொல் கூறி விமர்சித்ததைக் கண்டிப்பதற்காகத்தான் நடைபெற்றது, என்பதை உணர்ந்தவர்கள், தி.மு.கழகத்தின் அரசியல் பண்பாட்டையும் - தமிழ்ப் பற்றையும் வானளாவப் புகழ்ந் துரைத்தனர்! நாற்பதாண்டுக் காலப் பொது வாழ்வில் - அறிஞர் அண்ணா, பெரியாரிடத்தில் கற்றுக் கொண்ட ஆழமான கொள்கைப் பிடிப்பும், அதன் அடிப்படையில் அண்ணா நமக்கு வழங்கிய கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு எனும் உணர்வும், எதையும் தாங்கும் இதயத்துடன் அவர் நிகழ்த்திய எதிர்நீச்சல் அரசியலும் பொறுமையின் நிலைக்கள