உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 123 எடுத்தது மட்டும் வீண்காரியமாம்! ஊர்வலம் முடிந்த மறுநாளே, இந்தப் பெரியவர்கள் அறிக்கை விடுகிறார்கள்- பரவாயில்லை; என் உடன்பிறப்பே! அதைப்பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே! னா ஒருவன் தன்னைப் பார்த்து எச்சில் உமிழ்கிறான் கூறி - எரிக்கின்ற கதிரவன் எரிக்காமல் போய் விடுவானா? என்று “கொட்டும் மழையைச் சுட்டுப் பொசுக்குகிறேன் பார்' என்று கொள்ளிக்கட்டையை எடுத்து நீட்டினால் கட்டை தான் அணையுமே தவிர, மழையா நின்றுவிடும்? 'பாவம், பரிதாபத்துக்குரியவர்கள்’ என்று அவர்களை அலட்சியப்படுத்துவோம்! அதே சமயத்தில் இந்த எரிச்சல் காரர்களுக்கு மத்தியில் ஏறு நடை போட்டு - எழுச்சி முரசு கொட்டி-நமது வலிமையை மேலும் பெருக்குவோம்! அன்பான உடன்பிறப்பே! நீ அதனைச் செய்வாய் என்ற நிறைந்த நம்பிக்கை எனக்கு உண்டு! தலைநகர ஊர்வலத்தில் பத்து மைல் தூரம் நடந்துவந்த உன்பாதங்களுக்கு மலர் தூவுகிறேன்! நீ ஒலித்த உணர்ச்சிமயமான கொள்கை முழக்கங் களுக்கு என்னையே உனக்கு நான் காணிக்கையாக்கிக் கொள் கிறேன்! வெற்றி நமதே! வீணர் அதிர-வீடணர் வீழ - வீரச் சுடர்விழி காட்டு! 'இது தமிழர் நாடு' என்பதை நிலைநாட்டு! அன்புள்ள மு.க. 6-10-74