உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார், பார்-இதோ பார்! இந்தியா பார்! உடன்பிறப்பே! பசிக் கொடுமையின் கராணமாக நாற்பது பேர் பிணமாக விழுந்து விட்டார்கள் எங்கே இந்தக் கொடுமை-தமிழ் நாட்டில்தானே கழக ஆட்சியில் வேறென்ன நடக்கும்?" என்று கனல் கக்கும் கண்களுடன் மாற்றுக் கட்சியின் மதிப்புமிகு நண்பர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள்! ஏடு கொள்ளாமல் -எட்டுப் பத்தி தலைப்பிட்டு குவிப்பார்கள்! மேடை அதிர முழக்குவார்கள்! பரிதாபத்துக்குரியவர்கள்! - பட்டினியால் எழுதிக் மடிந்த இடம், பாட்னா நகருக்கு அருகாமையில் உள்ள 'சகர்சா' என்னும் ஊர்; அதாவது, பீகார் மாநிலத்தில்! இந்தச் செய்தி, செப்டம்பர் 29-ஆம் நாள் பம்பாயி லிருந்து வெளிவரும், 'டைம்ஸ் ஆப் இந்தியா' என்ற ஆங்கில தினசரியில் வந்திருக்கிறது. கல்கத்தாவிலிருந்து, 'அமிர்த பசார் பத்திரிகா' என்ற பத்திரிகை வெளிவருகிறது; புகழ்மிக்க ஏடுகளில் அதுவும் ஒன்று; மேற்கு வங்கத்தில் பட்டினிச்சாவுக்குப் பலியான வர்கள் தொகை, ஆயிரத்திற்கும் மேலாக இருக்குமென்று