உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா ஜோதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


அவற்றையெல்லாம் அவன் சிந்தித்துப் பார்த்துக் கைமாறு கேட்கிறானா? “உனக்காக ரத்தம் சிந்துகிறேன்! வியர்வை வடிக்கிறேன்! உயிரைத் தரவும் முன்வருகிறேன்! ஏன்? எதற்காக? பட்டாளத்துச் சிப்பாயாக நானும் படைத்தளபதியாக நீயும் இருந்து நமது கொள்கைக் கோட்டையைப் பாதுகாத்து எதிரியின் கொட்டத்தை அடக்குவதற்காக!" இப்படி அந்தத் தொண்டனின் இதயத்து உதடுகள் உச்சரிக்கின்றன! அவன் விடும் மூச்சுத்தான் புயலாக மாறி பகைவனின் கப்பற்படையையே கடலில் கவிழ்த்து விடுகிறது! அவன் கந்தலாடையில் கசங்கி, கைவிரல் களில் நசுங்கி, அழுக்கேறிய நிலையில் "நிதி" யெனும் பெயர் பெற்று தரப்படுகிற ஒவ்வொரு ஒரு ரூபாய்க் கரன்சியும்தான் கழகத்தின் “அரண் மனைப் பொக்கிஷம்!" அந்தக் கருவூலத்தின் ஒவ்வொரு காசையும் நியாயமாகச் செலவிடும் நேர்மையான நிர்வாகியைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_ஜோதி.pdf/13&oldid=1718258" இலிருந்து மீள்விக்கப்பட்டது