10
அவர்கள் வந்தால் வாழ்த்து முழக்கமிட்டு -- வராவிட்
டால் மனமொடிந்து குமுறி-- மறக்க முடியாத அனுப
வத்தைப் பெற்றிருக்கிறேன். அதனால்தான் தொண்
டனின் உணர்வுகளை என்னால் என்னை அறியாமலே
பிரதிபலிக்க முடிகிறது. இன்னமும் தொண்டனாகவே
இருக்க முடிகிறது!
அம்மவோ; இதோ ஓடிக் கொண்டிருக்கிறானே
-இவன் கையில் உள்ள "அண்ணா சுடர்" இவனது
தலைவனின் கரங்களில் கரூர் மாநாட்டு மேடையில்
இவனால் தரப்பட வேண்டுமாம்! அதற்காக இப்படி
ஓடுகிறான்! இவனது தலைவனும் ஒரு தொண்டன்
தான் என்பதை இவன் ஏன் அறியவில்லை? ஒருவேளை
அந்த உண்மையை அறிந்து கொண்டிருப்பதால்
தான் இப்படித் தலைதெறிக்க ஓடுகிறானா?
இவனது தூய உள்ளத்தைப் புரிந்து கொண்
டால் இவனுக்குத் துரோகம் செய்ய மனம் வருமா?
எத்தனை பேரைத் தூக்கி விடும் ஏணியாக இருந்திருக்
கிறான்-இவன் தோளில் கால் வைத்துப் பதவிப்
பொறுப்புகளில் அமர்ந்தவர்கள் எத்தனை பேர்!