உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா ஜோதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 அவன் கொட்டும் கண்ணீ ரும் செந்நீரும் வியர்வை மழையும் தான் · இந்தக் கழகக் கழனியில் ஆயிரங்காலத்துப் பயிரை விளைவிக்கின்றன! இத்தனைக்கும் குறைந்தபட்சம் அவன் ஒரு அமைப்பில் செயலாளானோ- தலைவனே- பொரு ளாளனோ - எந்தவொரு நிர்வாகஸ்தனாகவும் இல்லை! சாதாரண ஒரு உறுப்பினன்-ஆனால் சலியாது உழைக்கும் உடன்பிறப்பு! இரவெல்லாம் பனியில் குளித்துக் கொண்டே தோரணம் கட்டியிருப்பான்! தெருவெல்லாம் கொடிக் கம்புகளை நட்டிருப்பான்! அதோ அந்த வரவேற்பு வளைவுகள் அவனது உறக்கமின்மையின் படைப்புகள்! அந்தப் பதாகைகள் அவன் பட்டினி கிடந்து ஆற்றிய பணிக்குக் கிடைத்த பயன்! நானும் அவனைப்போல் தொண்டனாக இருந்து தோரணம் கட்டியிருக்கிறேன். விளம்பரச் சுவரொட்டி களில் பசைதடவிச் சுவர்களில் ஒட்டியிருக்கிறேன். மேடை அமைத்திருக்கிறேன். அழைக்கப்பட்ட தலை வர்களின் வருகைக்காக ரயிலடியில் காத்திருந்து;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_ஜோதி.pdf/11&oldid=1694798" இலிருந்து மீள்விக்கப்பட்டது