இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8
யில்லாமற் போன நேரத்திலும் செயலாற்றும் மன
வலிமை கொண்டான்! •
எம். எல். ஏ. ஆனானா? எம்.பி.ஆக ஆனானா?
அமைச்சராக வேண்டுமென அணுப்பொழுதேனும்
நினைத்தானா?
கட்சியினால் தனக்கு என்ன லாபம் என்று கேட்
காமல்--தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்று
வினாடிக்கு வினாடி வினா எழுப்பி வினையாற்றும் வீரன்
அவன்!
மேடையேறிப் பேசுகிறோம் நாம்! அவன் தனது
அகன்ற முதுகையல்லவா வளைத்துக் கொண்டு
நின்று அதன் மீதேறிப் பேசுக என்கிறான்! அவன்
முதுகுதானே நாம் முழங்கும் மேடை!
கொடியேற்றச் சொல்கிறான் அவன்! கொடிக்
கயிறாக அவன்நரம்புகளையல்லவா திரித்தெடுத்து நம்
கைகளில் திணிக்கிறான்!