உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா ஜோதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


அவர்களும் அவனையே பார்க்கிறார்கள். நானும், காரை மெதுவாகப் போகச் சொல்லிவிட்டு அந்தத் தூய தொண்டனின் திருமுகத்தையே கொண்டிருக்கின்றேன். பார்த்துக் அவன் பாதங்கள் புண்ணாவதைப்பற்றிக்கவலைப் படாமல் ஓடுகிறான்; பதவி ஒன்றில் எப்படியாவது அமர வேண்டும் என்ற ஆசையால் அல்ல! மண்டை பிளக்கும் வெயிலைப் பொருட்படுத்தா மல் ஓடிக் கொண்டிருக்கிறான்; மந்திரி பீடத்தில் உட்காரலாம் என்ற ஆவலுடன் அல்ல! ஒரு நக ராட்சி, ஊராட்சி உறுப்பினர் பதவி என்ற நப்பாசை கூட அவனைநாடியது இல்லை! காருக்குள்ளிருந்தவாறே கண்கலங்கக் கூறு கிறேன்; இவன்தான் கட்சியின் உயிர்! கட்சியின் ரத்த நாளம்! கட்சியின் இதயத்துடிப்பு! கட்சியின் மூச்சு! ஏன்; கட்சியே இவன்தான் என்று! என்ன கண்டான் அவன்? சிறை கண்டான்- சித்திரவதை கண்டான்-- “சிங்கிள் டீ" க்கும் வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_ஜோதி.pdf/9&oldid=1718254" இலிருந்து மீள்விக்கப்பட்டது