உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மு. கருணாநிதி உடனே பூஞ்சோலை பயந்துபேய் சுருளிமலையின் கையைப் பிடித்து "அடடா ! நீ இங்கே உட்காராதே! மெதுவா பேசி கிட்டே பிசாசு உன்மேலே பாய்ந்துவிடும்!" என்று இழுத்துக் கொண்டு அடுக்களைப் பக்கம் போய்விட்டாள். சிங்காரம் மௌனமானான். அவன் கண்களிலிருந்து நீர் பெருகி, காதோரத்தில் வழிந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவும் கையை அசைக்க முடியாமல் தவித்த அவனது சங்கடத்தைப் பொன்மணி பார்த்து விட்டு அருகே வந்தாள். தனியாக வருவதற்கு அவளுக்கு அச்சந்தான். இருந்தாலும் அச்சத்தையும் மீறிக்கொண்டு இரக்க சுபாவம் தலையெடுத்தது, அழாதீங்க!" என்று கூறி அவன் கண்ணீரை ஒரு துணியால் துடைத்து விட்டாள். என்ன காரணத்தாலோ, வீட்டுக்குப்போன கற்பூரம் திரும்பி வந்தவள், அந்தக் கண் துடைக்கும் காட்சியைப் பார்த்துவிட்டு உள்ளுக்குள் பேரானந்தமுடன் யாருக்கும் தெரியாமல் மறுபடியும் போய்விட்டாள். அவளுக்கு நம்பிக்கை தோன்றிவிட்டது. பொன்மணிக்கும் சிங்காரத்திற்கும் எப்படியும் நேசம் முற்றிவிடும் என்று அவள் கணக்குப்போட்டு தன் தந்திரத்தைத் தானே பாராட்டிக் கொண்டாள். வாழாவெட்டியான மைனாவுக்குத் தன் அண்ணன் கணவனாகக் கூடாது என்று நினைத்தாள். நினைத்த மறு நாளே மைனா, தன் குடும்ப கெளரவத்தில் குறுக் கிடாமல் இந்த உலகத்தை விட்டே போய்விட்டது அவளுக்குப் பெரிய திருப்தி. பொன்மணிதான் சிங்காரத்திற்கு மனைவியாக வேண்டு மென்று கற்பூரத்திற்கு ஏன் அவ்வளவு கவலை ? பொன்மணி, பேரழகி! அந்த அழகுப் பதுமை தன் தமயனுக்குப் பெண்டாக. வேண்டுமென்று நினைத்தாளா? அல்ல-அழகுக்காக அல்ல! பொன்மணி, அருங்குணவதி! குணத்திற்காகத் தன் குடும் பத்து மணப்பெண்ணாக வேண்டும் அவளென்று கருதினாளா? இல்லை குணத்திற்காக இல்லை! பின் எதற்காக? பொன் மணியை எப்படியாவது தன் அண்ணனுக்கு முடிச்சுப்போட வேண்டும் என்று விரும்பினாளே தவிர, அண்ணனுக்குப் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/68&oldid=1694955" இலிருந்து மீள்விக்கப்பட்டது