உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்ப மகிழ்ச்சி... அடையட்டுமே! உடன்பிறப்பே, பூம்புகாரில் நடைபெற்றது. . முழு நிலாவிழா" ஒரே ஒருநாள் காலையில் பட்டிமன்றம், மாலையில் விழா முடிந்தது. கவியரங்கம், கலைநிகழ்ச்சி - அத்துடன் அன்றிரவே மாயூரம் வந்து ரயிலேறி சென்னைவந்து சேர்ந்து விட்டோம். பட்டிமன்றத்தில் சிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சி நாவலர் தலைமை வகித்தார்.சிலம்புச்செல்வரும், தவத்திரு அடிகளாரும், காரைக்குடி கணேசனாரும் அணித் தலைவர்களாக நின்று பட்டிமண்டபத்தில் வாதாடினார்கள். சிறப்பை மாலைக் கவியரங்கமும். அதனைத் தொடர்ந்து நடை பெற்ற பேராசிரியர் உரையும் கலை நிகழ்ச்சியும் கூட ளங்கோவின் காப்பியச்சுவை பற்றியதாகவே அமைந்தன கடல் கொண்ட காவிரிப்பூம் பட்டினத்தின் விளக்கிட அங்கு கலைக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலவர் பெருமான் இளங்கோவின் புகழ் பாடப்பட்டது. கரிகாலன் ஆட்சியும், கண்ணகியின் மாட்சியும். பாண்டி யனின் பண்பாடும், சேரனின் வீரமும் விளக்கப்பட்டன. கடலோரக் குடிசைகளில் வாழ்ந்த மீனவ மக்களுக்கு வசதி யான கல் வீடுகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. இந்த விழாவைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை சில வட்டா ரங்களுக்கு! எரிச்சலைக் கொட்டுகிறார்கள். ஏளனம் செய் கிறார்கள். ஏகடியம் செய்து கட்டுரை தீட்டுகிறார்கள் அய்யோ! தமிழர்களின் மாண்பினைக் கூறும் விழா எடுத்து .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/67&oldid=1695094" இலிருந்து மீள்விக்கப்பட்டது