உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை மாநாடு-3 சத்திரத்துப் பேர்வழிகள் ! உடன்பிறப்பே, 8 3 . 99 இன்று என் அரசுப் பணியையொட்டி ஒரு ஆணை பிறப்பக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறும் ஈமூகத்தினரைக் குறிப்பிடும் போதும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறும் சமூகத்தினரைக் குறிப்பிடும் போதும், ஒரு சில சமூகத்தினர் பற்றிய பெயர்களின் இறுதி எழுத்து “ர் என்று இருப்ப தற்குப் பதிலாக என்று நீண்டகாலமாகக் குறிக்கப் பட்டு வருகிறது. இனி, அரசு தயாரிக்கும் பட்டியலில் அந்தச் சமூகங்களின் மதிப்பைக் குறைக்கும் வகையில் “ன்’ என்று இருக்கிற இறுதி எழுத்துக்களையெல்லாம் நீக்கி விட்டு, அந்த இடத்தில் "ர்" என்னும் எழுத்தையே பயன் படுத்த வேண்டுமென்பதுதான் இன்று பிறப்பித்துள்ள ஆணையாகும். 8 6 99 அடா! அடா! ஒரு எழுத்தை மாற்றுவது அவ்வளவு பெரிய ச தனையா என்று கேட்பவர்களும், கேலி புரிகிறவர் களும் இருக்கத்தான் செய்வார்கள். நானறிவேன் அவர் களை! அவர்கள் இந்த அரசு செய்துள்ள பெரிய சாதனை களையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் - ஆகவே எள்ளி இதனை இந்த நகையாடுவதில் வியப்பிருக்க முடியா எழுத்து மாற்றத்தின் பின்னால் ஒருசிறிய வரலாறே அடங்கி யிருக்கிறது என்பதை எண்ணிடும்போது என் இதயம் உணர்ச்சிமயமாகிறது. உடன்பிறப்பே! இந்தச் சிறு சாதனைக்கான ஆணை பிறப்பிக்கும்போது, எனக்கு 1957-ஆம் ஆண்டு ஜூலை