உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் . 173 அவர்கள் செய்கிற ஆர்ப்பரிப்பு எதிர்க்கட்சி ஏடுகளில் நாள் தோறும் வெளிவந்து. கொண்டிருக்கிறது. அவர்கள் நம்மைப்பற்றி எந்தக் கணக்கைக் கூட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? கழகம் ஆட்சி பீடத்தில் எத்தனைநாள் இருக்கும் என்ற கணக்கைத்தான்! சொல்லிப் அதைத்தான் பக்தவத்சலம், தன்னுடைய கட்டுரை கயில் தி.மு. கழகத்தின் கடைசிக்காலம் என்ற கருத்துப்பட தீட்டியிருந்தார் தமிழ், தமிழர் என்று பாசீசத்தை வளர்க்கிற கழகம் ஆட்சி நீடிக்காது- நீடிக்கவிட மாட்டோம் என்று கல்யாணசுந்தரனார் கர்ச்சித்திருப்பதை யும் ஏடுகளில் கண்டேன். என்னுடைய பழைய நண்பரும் அவரது சாது " தளபதிகளும் ஓரிருமாதம்தான் இந்த ஆட்சி' என்று முழங்குவதை ஏடுகள் சில கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. நண்பர் ஒருவர் மாதத்தையும் தேதியையும் குறிப்பிட்டுக் காங்கிரஸ் இதழ் ஒன்றில் கடிதமே எழுதி வெளி யிட்டுள்ளார். கவி எதிர் வரிசையினரின் குறிக்கோள் எல்லாம் நமது கழகத்தைக் கோட்டை சிம்மாசனத்திலிருந்து வேண்டும் என்பதேயாகும். இறக்க உடன்பிறப்பே. கழகத்தைக் கோட்டைச் சிம்மாசனத் திலிருந்து ஒருவேளை இறக்கி விடலாம்; ஆனால் நமது கழகம் கொலுவீற்றிருக்கும் மக்களின் இதயச் சிம்மாசனத்தை அவர்கள் அறிய மாட்டார்கள். 1966ஆம் ஆண்டு, கழகம், கோட்டையில் எதிர்க்கட்சி வரிசையில் தான் இருந்தது. 1949 முதல் 1967 வரையில் தி.மு கழகத்தின் கையில் ஆட்சிச் செங்கோல் வழங்கப்படவில்லை எனினும், மக்கள் மன்றத்தில் இந்தக் கழகம் கோலோச்சி வந்ததென்பதை மறுத்திட முடியுமா? கடைசிக்காலமென்கிறார் பக்தவத்சலனார் நமக்கு! அந்தப் பெரியவரின் ஆசை புரிகிறது. ஆனால் தமிழ்மொழி உள்ளவரையில், கடைசித் தமிழ் மகன் சாகாமல் இருக்கும் வரையில், இந்தக் கழகம் இருக்கும்.