உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கலைஞர் வான ஊர்தி - வலவன்! இவை தமிழ் இலக்கியத் திலே காணப்படும் சொற்கள். அதிலும் "வலலன் இல்லா வானவூர்தி' - இதுவும் அன்றிருந்ததோ இல்லையோ; புலவர் அவ்வாறு விஞ்ஞான ரீதியாகக் கற்பனை செய்கிறார். என் செய்வது; கதைகளோடும், கற்பனைக் கவிதை களோடும் நமது விஞ்ஞான அறிவு, நின்று விட்டது! இனியாவது அந்த அறிவு விரிவடைய புதியதோர் எழுச்சியைத் தோற்றுவிப்போம்! புத்துலகின் சாதனைப் பட்டியல்களில் நமது நாட்டுச் சாதனைகளையும் இணைத்து மகிழ்வோம்! அன்புள்ள, மு.க. 14-8-76