உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 நான் அந்த அறிவிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணமே - மத்திய சட்ட அமைச்சர் மத்தியிலியிருந்து ஒன்றைப் பேசினால் அது மறுநாளோ. மறுவாரமோ அல்லது மறு திங்களோ நடப்பது வழக்கமாக இருக்கிறது – கடந்த சில நாட்களாக! அவர், 'பிரதமரைத் தேர்தல் வழக்கில் இழுக்கலாமா. வேண்டாமா, என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக் கிறோம்' என்று நாடாளு மன்றத்தில் பேசினார். அப்படிப் பேசிய அடுத்த இரண்டாவது நாள், பிரதமரைத் தேர்தல் வழக்கிலே இழுக்கக்கூடாது என்கிற வகையிலே சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கும் மேலாக, எந்த வழக்கிலும், அது குற்ற வழக்கானாலும் சிவில் வழக்கானாலும் பிரதமர் மீது யாரும் வழக்கு தொடுக்கக் கூடாது என்கிற திருத்தமும் நிறைவேற் றப்பட்டிருக்கிறது. இப்போது இந்த அரசியல் சட்டமே மாற்றப்பட வேண்டுமென்று சொல்கிறார் மத்திய சட்ட அமைச்சர். 1952-ல் கழகம் சொன்னது என்ன? 1952-ம் ஆண்டு தி. மு. கழகம் இந்தக் கருத்தைத்தான் மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவிலே வெளியிட்டது. அதுவும் எந்த வகையிலே வெளியிட்டதென்றால்- 17-11-1951 தேதியில் அந்தப் பொதுக்குழு பெறுகிறது. நடை அந்தப் பொதுக் குழுவில் இந்தியாவின் அரசியல் சட்டத்தைப் பற்றிக் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்கள் அதற்கான வியாக்யானங் களைத் தந்தார்கள். இந்த அரசியல் சட்டம் எத்தகையது? இது யாரால் தயாரிக்கப்பட்டது? என்பவைகளை எல்லாம் அண்ணா எடுத்துக் கூறினார். அந்த அரசியல் சட்டத்தை நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/39&oldid=1695816" இலிருந்து மீள்விக்கப்பட்டது