உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 opposition has Derailed Democracy: Mrs. Gandhi என்ற தலைப்பிலே அம்மையார் அவர்கள் சொல்லியிருக் கிறார்கள். Democracy, she said, meant not only a certain duty on the part of the ruling party to give certain freedom to the Opposition but it also enjoined responsibility on the Opposi- tion parties to go "according to the rules of democracy and that is not to obstruct governmental functioning and not to obstruct working of the nation." "அரசாங்கத்தின் வேலைகளைச் ஸ்தம்பிக்கச் செய்வதோ, அல்லது தேசீயக்காரியங்களைத் தடுத்து நிறுத்துவதோ ஜனநாயகம் ஆகாது" என்கிறார். ஆமாம், அதை ஒத்துக் கொள்கிறோம். கடைசியாகச் சொல்கிறார். The manner in which this movement went on was quite extraordinary. இந்த Extraordinary' என்ற வார்த்தை தான் நேற்றைய பேராசிரியருடைய தீர்மானத்திலே இடம் பெற்று அதைத் தான் நாவலர் அவர்கள் வழி மொழிந்தார். அந்த நிலையை மாற்றி, இயல்பான நிலை உருவாவதற்கு தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையில் ஒரு அதிகாரப் பொறுப்பிலே இருக்கிறவன் என்ற காரணத்தினால் அந்த முயற்சியை மேற்கொண்டு, நாட்டிலே இருக்கிற தலைவர்களை எல்லாம் சந்தித்து (வெளியே இருக்கிற தலைவர்களைத் தான்; பிரதமர் அனுமதித்தால் உள்ளே இருக்கிற தலைவர்களையும் சந்தித்து) பிறகு பிரதமரையும் சந்தித்து, ஒரு சுமுகமான சூழ்நிலைக்கு அம்மையார் அம்மையார் அவர்கள் நல்ல முடிவெடுக்க உதவிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணமே தவிர வேறல்ல. நேற்று பேராசிரியர், "கருணாநிதியை நாங்கள் தூதாக அனுப்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/57&oldid=1695834" இலிருந்து மீள்விக்கப்பட்டது