உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 "செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து பின் வாங்கிவிட்டார்கள்" என்பது ஒரு கருத்து! அருமையான தீர்மானம்; நல்லெண்ணத்தோடு இந்தப் பிரச்சினையை அணுகுகிறோம்" என்பது இன்னொரு கருத்து! இந்த விமர்சனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நான் விரும்பவில்லை; அதற்காக, 'மக்களின் குரலை மதிக்கவில்லை' என்று பொருள் அல்ல! நமக்குள்ள இலட்சியம், 'எப்படியாவது இயல்பான சூழ்நிலை இந்தியாவில் ஏற்பட வேண்டும்' என்பதுதான்! விசித்திர மனிதரின் விந்தையான வாதம் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம்- (போனால் போகிறது; அவருடைய பெயரையே சொல் கிறேன்) - நெல்லை மாநாட்டில் பெயரைக் குறிப்பிடாமல் "கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்' என்றுதான் சொன்னேன்; ஆனால் பத்திரிகைக்காரர்கள் எல்லாம் மிகுந்த ஆர்வத்தோடு, அவருடைய பெயரையே போட்டுவிட்டார்கள்; அவர் என்ன சொல்கிறார் என்றால், 'நெல்லை மாநாட்டில் தீர்மானத்தைப் போட்ட பிறகு, நீங்கள் உங்கள் செயற்குழுத் தீர்மானத்தை வாபஸ் வாங்குகள்' என்று! சொல்வது- கல்யாணசுந்தரம்! மகா பாரதத்துச் சகுனியைப் போல. இன்றைக்கு அரசியல் வட்டாரத்தில் சேர்ந்திருக்கின்ற வலது கம்யூ னிஸ்டுக் கட்சித் தமிழ் நாட்டுத் தலைவர், ‘அந்தத் தீர்மானம் வேறு-இந்தத் தீர்மானம் தீர்மானம் வேறு' என்கிறார்! சென்னையில் கொண்டை முடித்தால், நெல்லை யில் பூ வைக்கக் கூடாதா? சென்னையில் போடப் பட்ட செயற்குழுத் தீர்மானம் ஒரு மங்கை முடித்த அழகான கொண்டைக்கு சமானம் (கைதட்டல்); நெல்லையில் போடப்பட்ட தீர்மானம்தான் பூவிற்குச் சமானம் (பலத்த கைதட்டல்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/84&oldid=1695861" இலிருந்து மீள்விக்கப்பட்டது