உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 யளித்திருக்கிறார்; அந்தப் பேட்டியில், கிட்டதட்ட ஆறு அம்சங்கள் நம்மைக் கவரக்கூடிய அம்சங்களாகும். முதல் அம்சம் - இந்தியாவில் ஒரே கட்சி ஆட்சி ஏற் படுத்தும் உத்தேசமில்லை' என்று சொல்லியிருக்கிறார்; இது. வரவேற்கத்தக்க ஒன்றாகும்! இரண்டாவதாகப்பிரதமர் – 'பலவிதமான பழக்கவழக்க முள்ள மக்கள் வாழ்கின்ற நாட்டில், தங்களுக்கு இஷ்டமான கட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு வேண்டும்' என்கிறார்; இதைத்தான் தி. மு. கழகம் சொல்கிறது! மூன்றாவதாகப் பிரதமர்-'நாட்டைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், நாட்டிற்கு ஏற்படும் சவால்களைச் சமாளிக்கவும், தேவையான அதிகாரம் மத்திய அரசுக்கு வேண்டும்' என்கிறார்; இதுதான் தி. மு. க.-வின் மாநில சுயாட்சித் தத்துவம்! நாட்டைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளவும்- நாட்டிற்கு ஏற்படும் சவால்களைச் சமாளிக்கவும் தேவையான அதிகாரம் மத்திய அரசுக்கு வேண்டும்: அம்மையார், 'எல்லா அதிகாரமும் மத்திய அரசுக்கு வேண்டும்' என்று சொல்ல வில்லை; நாட்டிற்கு ஏற்படும் சவாலைச் சமாளிக்க நாட்டைக் கட்டுப்படுத்தத் தேவையான அதிகாரம்தான் மத்திய அரசுக்கு வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்! நான்காவதாக-'ராஜ்யங்கள், தத்தம் பிராந்தியத்தின் மீதுள்ள அபிமானத்தை வெளிப்படுத்தப் போதுமான வாய்ப்புக்களை அளித்தாலே, இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு. வலிமையாகவும்-ஐக்கியமாகவும் இருக்க முடியும்' என்று பிரதமர் சொல்லியிருக்கிறார்; இதுவும் தி.மு.க. எடுத்துச் சொல்லி வருகின்ற கருத்துத்தான்! இந்தியாவிலே பல தேசிய இனங்கள்-பல மொழி பேசுகிற மக்கள்; அந்தத் தேசிய இனங்களுக்கு -பல மொழி பேசும் மக்களுக்குப் பல்வேறு கலை-கலாச்சாரம்-பண் பாடுகள் இருக்கின்றன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/86&oldid=1695863" இலிருந்து மீள்விக்கப்பட்டது