உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைவன ரோஜா “நாம் வெறும் மாணவர்கள் மட்டுமல்ல-எதிர் கால உலகத் தின் சிற்பிகள் !'-இப்படிப் பத்து மாணவர்களைப் பார்க்கும் போதெல்லாம் கந்தையா சப்தம் போட்டுச் சொல்வான். சிரித்துக் கொண்டே சொல்வான். இதை மற்றவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியதுதான் தன்னுடைய பிறவிப் பயனாகக் கருதியவன் போல் சொல்லிக்கொண்டே இருப்பான் ! 66 எங்கள் கல்லூரி ஒரு பலசரக்கு மண்டி; யார் எதை எதிர் பார்த்து வருகிறார்களோ அது தப்பாமல் கிடைக்கும். காதல் வேண்டுமா? தோகை மயிலாளின் ஜாகையை நோக்கிப் படை யெடுக்கும் ஒரு இளைஞர் பட்டாளம்! பாதையை மறிக்காமல் வாழட்டும்" என்ற பெரும் உபதேசத்தோடு ஒதுங்கிவிடு வார்கள் மற்றவர்கள்! அறிவு வேண்டுமா? அதோ இருக்கிறது நூல்நிலையம். புத்தகங்களைக் கட்டி அழுதபடியே இருக்கலாம்...... அரட்டை அடிக்கவேண்டுமா? ஒரு மணி நேரமா அல்லது நாள் முழுவதுமா? என்று கேட்டபடி ஒரு கூட்டம் வரும் ! மற்றும் மேட்னிக் காட்சி ரசிகர்கள், சீட்டுக் கச்சேரி வித்துவான்கள், இந்த ரகத்தினர் ஏராளம்! ஏராளம்! அந்த வகுப்பின் கடைசி டெஸ்கி 'லே வசிஷ்ட மண்டல மென ஒரு சில நட்சத்திரங்கள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. அதிலே வட்டமிடும் நிலவாகத் திகழ்ந்தான் கந்தையா.