உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாக்ய சிந்தாமணி 179 காகவே தகாத தந்திரத்தைக் கையாண்டு, ஜோதியின் மனத்தை மாற்றினேன். ஆனால் நான் எதற்காக உயிர் வாழ இச்சித்தேனா. அந்த ஆசை நாசமாகி விட்டது. போஷாக்கில்லா த நிலையில் பிறந்த ஆண் மகவு இந்த உலகத்தைப் பார்க்க விருப்பமில்லாமல் பிரே தமாகவே பிறந்துவிட்டது. இதைச் சொல்லிவிட்டு, அவள் ஒரு பெருமூச்சோடு எழுந்தாள். துயரத்தின் சாயல், அவளது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்ட து. அதோ அந்த வீட்டுக்கெதிரே பாடுகிறாள் பாருங்கள்; அந்தச் சோக கீதத்தில் கூட ஏழ்மையின் பிரதி பலிப்பு இல்லையே! காதலின் தோல்விதானே எதிரொலிக்கிறது !