உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 "6 66 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் " இது பல நாளாய் நடக்கிறது" என்று சிந்தாமணி விளக்கம் பேசினாள். ஜோதி தன் தலையில் அடித்துக் கொண்டு, வீட்டுக்குத் திரும்பினான். விபச்சாரி! விபச்சாரி ! என்று அவன் வாய் உளறிக்கொண்டேயிருந்தது. அப்படி அவன் விபச்சாரியாக வாவது கருதித் தன்னை மறந்துவிட்டால் போதும் என்பதற் காகவே சிந்தாமணி அந்தக் கொடிய செயலில் இறங்கினாள் என்ற உண்மை அவனுக்குத் தெரியாது. அவன் எண்ணியிருக்கிறான் அவள் விபச்சாரி என்று! அவளை வெள்ளமல்ல ! விபச்சாரியாக்கியது ஜோதியின் குடும்பத்திற்கு அவளது ஆசைப் பெரு ஆறுதல் அளிக்கவேண்டும் என்பதற்காகவே அவள் அந்த முடிவுக்கு வந்தாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். விபச்சாரி என்று பெயர் எடுத்தாலும் பரவாயில்லை. குடும்பத்தைக் கெடுத்த பழிகாரி, சண்டாளி, என்ற பெயர்களைச் சுமக்க அவள் விரும்பவில்லை, அனைவருக்கும் வரவேற்பு வழங்கும் மண்டபமாக அந்தக் குடிசையை அமைத்துக் கொள்ளவில்லை. 8 6 கொள்கை நிறைவேறியதும், அந்த ஊரைவிட்டு வெளி யேறினாள். 'என் அம்மா ஒழுங்காக வாழச் சூழ்நிலையிருந்தும் ஒழுங்காக வாழவில்லை. நானோ ஒழுங்காக வாழ எண்ணங் கொண்டும் சூழ்நிலை என்னை ஒழுங்காக வாழ விடவில்லை ! 66 இதுதான் அந்தப் பிச்சைக்காரி தன் கதைக்குத் தந்த முடிவுரை. ஜோதியின் தகப்பனார் என்ன ஆனார்?" என்று கேட்டேன். அவருக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது-ஆனால் அவரது மகன் ஜோதிக்குப் பைத்தியம் பிடித்துக் கடைசியில் இறந்தே விட்டான்" என்று அவள் அழுதுகொண்டே சொன்னாள். ஆமாம்-ஜோதி உன்னை மறக்க வேண்டுமானால், நீ தற்கொலை கொண்டிருக்கலாமே-அதற்காக இப்பெரும் பழிக்கு ஆளாக வேண்டியதில்லையே? " என்று நான் அவளைக் கேட்டேன். அதற்கு அவள் தேம்பும் குரலில் சொன்ன பதில் இதுதான்:- 66 செய்து " “தற்கொலை செய்து கொள்ளத்தான் நினைத்தேன். ஆனால் ஜோதியின் அன்புச் சின்னம் என் வயிற்றிலே மூன்று மாதம் வளர்ந்திருந்தது. அதை அழிக்க நான் விரும்பவில்லை. அதற்