உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பார்த்தது மாத்திரமல்ல; இந்த மாநாடு சிறப்புற பங்கும் ஏற்றார் என்று கேள்விப்பட்டேன். பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி அவர்கள் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். முதலிலே குறிப்பிட்டதைப் போல, நானும் வந்து பார்த்துவிட்டுத்தான் போனேன். ஆனால், பொன்முடி! இந்த மாநாடு இவ்வளவு , சிறப்பாக, வெற்றிகரமாக உனக்கு பெருமை தேடித் தருகின்ற அளவிற்கு அமைந்ததற்குக் காரணம் - நீ நன்றி சொல்ல வேண்டியது எனக்கல்ல, உன்னோடு சேர்ந்து பணியாற்றிய கழக உடன்பிறப்புக்களுக்கு அல்ல, நான் குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு அல்ல, தலைமைக் கழகத்திற்கு அல்ல, நீ நன்றி சொல்லவேண்டியது இப்போது இருக்கிற அரசாங்கத்திற்கு, போலீஸ் இலாகாவிற்கு! நான் கேட்கிறேன். எவ்வளவு பெரிய கூட்டம் இது. தம்பி துரைமுருகன் குறிப்பிட்டதைப் போல, நான் தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களுக்கு செல்லும்போது, ஒவ்வொரு கூட்டத்தையும் மகா சமுத்திரம் என்று சொல்வேன். வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் கீழே விழுந்து தேனீக்களாக உருவெடுத்து அவைகள் எல்லாம் கட்டிய தேனடை போன்றது இக்கூட்டம் என்று சொல்வேன். அவ்வளவு பெரிய கூட்டம் இந்தக் கூட்டம். பரமக்குடியா, திருநெல்வேலியா, திருச்சியா, மதுரையா எல்லாவற்றையும் விஞ்சுகின்ற அளவிற்கு நடந்து கொண்டிருக்கிற இந்தக் கூட்டத்தில் நான் தேடித் தேடிப் பார்க்கிறேன். நல்லவேளை மாசிலாமணி தலைமையில், பொன்முடியினுடைய ஆற்றலால் ஒருபெரிய எண்ணிக்கை கொண்ட தொண்டர் படை அமைக்கப்பட்டிருக்கிறது. தொண்டர்படைத் தோழர்களையெல்லாம் நான் காவல்துறை நண்பர்களைப் போல கருதுகிறேன்.