உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

காவல்துறை நண்பர்களுக்கு, அதிகாரிகளுக்கு ஒரு நம்பிக்கை. திராவிட முன்னேற்றக் கழகம் கண்ணியம் வாய்ந்த கழகம், கட்டுப்பாடுமிக்க இயக்கம். அங்கே நாம் போய் செய்யவேண்டிய வேலை என்ன இருக்கிறது, என்ன கிழிக்கப் போகிறோம். கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் அவர்களே காப்பாற்றுவார்கள். அப்படி பயிற்றுவிக்கப்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற நம்பிக்கை காவல்துறை நண்பர்களுக்கு இருக்கின்ற காரணத்தினால்தான், அவர்கள் யாரும் இங்கே வரவில்லை போலும். அவர்கள் எங்கேயோ காவல்புரிகிறார்கள் என்று சொன்னார்கள். அது எங்கே, எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகளை நான் மிகுந்த கனிவோடு கேட்டுக்கொள்கிறேன். நியாயமா இது ? நான் சுயநலமாகப் பேசவில்லை. என்னைப்பற்றி தற்பெருமையாக கருதவில்லை. ஆபத்துக்கள் விளையக்கூடியவர்கள் என்ற பட்டியலில் 'இசட்' பிரிவின் கீழ் நான் இருக்கிறேன். நான் கலந்து கொள்கின்ற ஒரு கூட்டத்தில், நீங்கள் தருகின்ற பாதுகாப்புக்கு என்ன பெயர் ? நல்லவேளையாக மத்திய சர்க்கார் தம்பிகள் டி.ஆர்.பாலு, ராஜா போன்றவர்கள், அன்றைக்கு எடுத்த முயற்சியின் காரணமாக ஏழெட்டு கறுப்புப் பூனைப்படையினர் என்னுடன் வந்து கொண்டிருக்கிறார்கள். அது இசட் பிரிவு பாதுகாப்பு என்பதற்காக. நான் அந்தப் பூனைப்படை இல்லாமல்கூட எங்கும் தாராளமாக செல்லக்கூடிய மன இயல்பு