உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 ஆனந்தத் தாண்டவம் என்றான். நெருப்பு முகம் நிலவாகச் சிரித்தது! நெளியும் கைவிரல்கள் பார்ப்பவர் நெஞ்சில் புத் துணர்ச்சி பாய்ச்சின! நெஞ்சத்து விம்மல், கலையழகின் உச்சத்தை உணர்த்தியது! டன. அனவரதத் தாண்டவத்தின் பாவமும், அற்புதத் தாண்ட வத்தின் நேர்த்தியும், இனியன் உள்ளத்தைக் கொள்ளை கொண் தன் முயற்சி வெற்றிபெறும் என்ற பூரண நம்பிக்கையில் பூரிப்படைந்தான். திரிபுரம், புஜங்கம் ஆகிய தாண்டவங்களுக் குரிய பாவங்களை அவள் ஆடிக்காட்டி இனியனின் மனமார்ந்த பாராட்டுரைகளைப் பெற்றாள். சங்கார தாண்டவத்தின் பாவ உணர்ச்சியை அவள் காட்டும் போது, கொடுவாள் கொண்டு நிற்கும் மாவீரனும் நடுங்கிவிடக் கூடும். பிரளய தாண்டவத்திற்குரிய சில நிலைகளைக் காட்டும்போது கலைவயப்பட்ட இளைஞனாம் சிற்பி இனியனின் சண்கள் நீர்த்திவலை நிறைந்து மின்னிக்கொண்டிருந்தன. அவள் கைகள் அசைந்தன; அதில் கடல் கொந்தளித்தது! உடல் குலுங்கி ஆடிற்று; அதில் மலைகள் நடுங்கின! இடை துவண்டது; அதில் நதிகள் திசை மாறிப் போயின! விழிகளை உருட்டினாள்; அதில் எரிமலை பொங்கியெழுந்தது! கோபச் சிரிப்பு; அங்கே மின்னல்கள் கோடி கோடி! பூமி அதிர்ந்தது போல் - பூகம்பம் வந்தது போல்- புயலும் தீயும் தோழமை கொண்டு தாவியது போல் அவள் ஆடிக் காட்டிய பிரளய நடனத்து நிலைகள் கண்டு இனியன் மெய்ம்மறந்து போனான். அழகிக் கிழவி ஓடிப்போய்த் தன் மகளைக் கட்டித் தழுவிக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டாள். தன்னை மறந்து நின்றுகொண்டிருந்த இனியன், மெல்ல நினைவு வரப் பெற்றவனாய்ப்பேசுவதற்கு நாவை நனைத்துத் தயார்படுத்திக் கொண்டு, 'சாமுண்டி ! கலையுலகின் தலைமைப் பீடத்தை அலங் கரிக்க வேண்டிய தெய்வம் நீ ! அழகிப் பாட்டி செய்த பாக்கியம் கலைமகள் அவள் வயிற்றில் உதித்திருக்கிறாள் என்றுதான் கூற வேண்டும். பாட்டி மிகுந்த புண்ணியம் செய்தவள். அதனால் தான் அவள் அளித்த தளக்கல் இவ்வளவு புகழ் வாய்ந்த கோபுரத்து விமானத்தின் உச்சியில் ஏறிக்கொண்டது. அவள் வயிற்றில் பிறந்த உன் கலைச் செல்வமும் கோயிலின் மேல்தளத்தின் உட் பாகத்து அடிவரிசையில் பாதுகாக்கப்படப் போகிறது. சாமுண்டீ! ஆண்டவனே வந்து இந்தத் தாண்டவங்களை ஆடிக் காட்டியிருந் தாலும் உன்னை ஜெயித்திருக்க முடியாது என்பதே என் திடமான அபிப்பிராயம். என்றவாறு வர்ணிக்கத் தொடங்கிய இனியனை இடைமறித்துக் கிழவி, "அப்படியானால் தம்பீ, நாளை முதல் சாமுண்டியை இங்கு வரச் சொல்லட்டுமா ?" என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/44&oldid=1699681" இலிருந்து மீள்விக்கப்பட்டது