உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 பெருமானின் ஆசையை விரைவில் நிறைவேற்ற முடியுமா என்று சொல்லு !” இனியன் ஆச்சரியத்துடன் கிழவியையும் சாமுண்டியையும் மாறி மாறிப் பார்த்தான். "நான் முதலிலேயே நினைத்தேன்-உடலமைப்பு நடனத்திற் கென்றே அமைந்ததுபோல் இருக்கிறதென்று ! எங்கே சாமுண்டி, நான் கேட்கும் சில தாண்டவ நிலைகளின் பாவத்தைப் பிடித்துக் காட்டு, பார்ப்போம்!" -என்று குளிர் மொழிகளை வாரியிறைத்தான் இனியன். ஆடற்கலையில் மிக்க வல்லவர்களாகவும், அதற்கெனக் கலைக்கூடங் களில் பயின்றவர்களாகவும் உள்ள நூற்றுக் கணக்கான பெண்கள் தோல்வியுற்றுத் திரும்பிய ஒரு போட்டிக்குச் சாதாரண ஒரு பெண் ஆடுங்கலை தெரியாத குடும்பத்தில் பிறந்தவள் ஆடு வளர்க்கும் கலை மட்டுமே பயின்ற அழகியின் திருமகள் தைரிய மாக வந்து நிற்பது கண்டு அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் சிற்பப் பணி முடிவடைந்துவிடும் என்ற ஆறுதலும் தோன்றிற்று. அந்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் வெற்றிகொள்ளும் வகையில் ஐயப்பாடும் எழுந்தது. 'அவள் திறமையுள்ளவள்தானா? தனக்கு. உதவியாக இருப்பாளா ? தன் கலைத் தொண்டினை வெற்றிபெறச் செய்வாளா?' இந்த வினாக்குறிகளின் களமாயிற்று இனியனின் நெஞ்சம். சாமுண்டி பூமியைத் தொட்டு வணங்கி, ஆசான் வணக்கம் தெரிவித்துவிட்டு, அந்தச் சிற்பியின் முன்னால் வந்து நின்றுகொண்டு அவன் வாயசைவுக்குக் காத்திருந்தாள். 'சிற்பி இனியன் அவளைச் சோதித்துத் தேர்ந்தெடுக்கும் முறை எப்படியென்பதைக் கிழவி யும் ஆவலுடன் எதிர்பார்த்தவாறு அங்குள்ள ஒரு படியின் மீது உட்கார்ந்துகொண்டாள். மகள் சாமுண்டி வெற்றி பெறுவாள் என்ற நம்பிக்கை அந்தக் கிழவியின் முகத்தில் ஜொலித்துக்கொண் டிருந்தது. ஊர்த்துவ தாண்டவத்தின் நிலைகளைக் குறிப்பிட்டு பாவங்களைக் காட்டுமாறு முதலில் கூறினான். சாமுண்டி அவன் விரும்பிய பாவங்களை யெல்லாம் துரிதமாகவும் மிகத் துல்லியமாகவும் பிடித்துக்காட்டினாள். அடுத்தது ஆச்சரிய தாண்டவம் ! அகலத் திறந்துகொண்ட அவள் விழிகளிலிருந்து பொழிந்த வண்ணமிருந்த வியப்பே வியப்பு! வெள்ளிமலர் ஒன்றின் நடுவில் கரு வண்டு சுழல்வதே போல் அவள் கரு விழிகள் சுழன்ற காட்சி கண்டு இனியன் அயர்ந்து போனான். அகோர தாண்டவத்தின்போது அந்த மலர் முகம் எப்படித் தான் நெருப்பாக மாறியதோ தெரியவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/43&oldid=1699680" இலிருந்து மீள்விக்கப்பட்டது