உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 போகிறது. அதை நினைத்து ஏங்கிக்கொண்டிருந்த இனியனின் காதில் “தம்பீ! என்று யாரோ அழைக்கும் ஒலி கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கிழவி அழகி அவனருகே வந்தாள். அவளைப் பார்த்த இனியனின் கண்கள் அவளுக்குப் பின்னால் நின்ற அழகிய பெண்மீது பாய்ந்தன. தங்கமேனி. தாமரை முகம். நீலக் குறுநயனம். கோலச் செவ்வாய். வில்போல் புருவம். விம்மிய மார்பகம். ஆலிலை வயிறு. நூலிழை இடை. இத்தனை அழகையும் இனியன் ஒரே பார்வையில் மொண்டு விட்டான். அது சிற்பியின் கலைக் கண்ணோட்டமே தவிரச் சித்தம் பேதலித்தவனின் காம வெறியாட்டமல்ல ! "பாட்டீ ! என்ன வேண்டும் ? யார் இந்தப் பெண் ? கும்பீ! இவள் என் மகள் ! உறையூரிலிருந்து நேற்றுத்தான் வந்தாள். உன்னைப் பார்க்கத்தான் அழைத்து வந்தேன். இனியன் அவளை மீண்டும் கவனமாகப் பார்த்தான். அழகே உருவாக நிற்கும் அவளுக்கு அந்தச்சாதாரண ஆடைகள் மேலும் பொலிவை அள்ளிப் பொழிந்ததை அவனால் ரசிக்க முடிந்தது. "உன் பெயர் என்னம்மா ?" சிற்பியின் கம்பீரமும் கனிவும் குழைந்த கேள்விக்கு அவள் அளித்த பதிலில் இனிமை தவழ்ந்தது. "என் பெயர் சாமுண்டி! கிழவி, இனியனிடம் தான் வந்த காரியத்தை எடுத்துரைக்க விரும்பினாள். 'தம்பீ! இந்த இராசராசேச்சுரத்தை வெற்றிகரமாகக் கட்டி முடிக்க என்னால் இயன்ற உதவிகளை யெல்லாம் செய்வ தென்று முடிவுகட்டிக் கொண்டிருக்கிறேன். அது ஒன்றுதான் என் வாழ்க்கையின் கடைசி இலட்சியமாகும். அரசர் பெருமான் விரும் பியவாறு நடனச் சிற்பங்கள் இன்னும் செதுக்கப்படாததால் ஆலயத் திருப்பணி முடிவடைந்தும் அவருக்கு மன நிறைவு ஏற்பட வில்லையென்று கேள்விப்பட்டேன். நீ செதுக்க வேண்டிய சிற்பங் களுக்குத் தேவையான நாட்டியமாடப் பெண்கள் கிடைக்காமல் வேலை தயங்கிக் கிடக்கிறதாமே? அதற்காகத்தான் என்மகள் சாமுண்டியை அழைத்து வந்திருக்கிறேன். இவள் நாட்டியக் கலையை முறையாகப் பயின்றவள். உன் சிற்பங்களுக்கு ஏற்ற வாறு ஆடிக் காட்டுவாள். இவள் உதவியை நீ பெற்று அரசர் 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/42&oldid=1699679" இலிருந்து மீள்விக்கப்பட்டது