உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 எதிர்காலத்தில் நமது பேரரசின் பரப்பளவா மிச்சம் இருக்கப்போகி றது ? இருந்தால்தான் என்ன ? அதைப் பார்த்து எனது வீரத்தை மதிப்பிடலாம். கலையுள்ளம் இல்லாத காட்டுமிராண்டியின் போக்கிற்கு வீரமென்றா பெயர் ? வெறிக் கூத்தல்லவா ?' - என்று எதிர்காலம் கேள்வி கேட்குமே ! அதற்குப் பதில் சொல்வது யார்? தஞ்சைக் கோயிலில் இருக்கும் என் சிலையா ? வேண்டாம்! வேண்டாம்! அந்தச்சிலையை அவமானப்படுத்த வேண்டாம்! இப்போதே அதனை உடைத்தெறிந்துவிட உத்தரவிடுகிறேன் ! இராசராசனின் ஆவேசமும் சோகமும் கலந்த உரைகளைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். குந்தவையார் கண்களில் நீர் தளும்பிற்று. கண்டராதித்தன் மௌனமாக வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். பஞ்சவன்மாதேவி தன் கணவன் இராசேந்திரனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். " இராசேந்திரன் தந்தையின் ஆத்திரத்தைத் தணிக்கும் எண்ணத்துடன் தழுதழுத்த குரலில் அவனது கால்களில் தனது முகத்தை புதைத்தவாறு, "தந்தையே ! அப்படியெல்லாம் சொல் லாதீர்கள். தாங்கள் ஆணையிட்டு நாங்கள் எதை நிறைவேற்றா மல் விட்டிருக்கிறோம்? நூற்றெட்டு நிலையுள்ள நடனச் சிற்பங் களை அந்தச் சிற்பி இனியனை விட்டே செதுக்கச்செய்கிற பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். தாங்கள் கவலையை விடுக !" என்று உறுதியாகக் கூறினான். இராசராசனும் மகனின் உறுதி கேட்டுச் சிறிது அமைதி பெற்றான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒருநாள் மாலை, கோயில் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் எல்லாரும் தங்களுடைய அன்றைய வேலையை முடித்துவிட்டு, உணவருந்தவும் ஓய்வு பெறவும் புறப்பட்டுக்கொண் டிருந்தார்கள். மாமல்லபுரத்திலிருந்து வந்துள்ள சிற்பி இனியன் மட்டும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்த பெரிய நந்திச் சிலையின் அருகே அமர்ந்து ஆகாயத்தை நோக்கிச் சிந்தனையை ஓடவிட்டுக் கொண்டிருந்தான். வந்து நாட்கள் பலவாகியும் தனக்குரிய சிற்ப வேலையைத் தொடங்குவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லையே என்ற கவலை அவன் முகத்தில் படர்ந்திருந்தது என்று யாரும் யூகித்துவிடலாம். தன்னை அழைத்திருக்கிற அரசனோ சோழப் பேரரசின் இணையற்ற சக்கரவர்த்தி இராசராசன். அவன் பெயர் கேட்டுப் பகைவர் நாடுகள் ஊமையாய் ஆமையாய் அடங்கிக் கிடக்கின்றன. அப்பேர்ப்பட்ட மாவீரன் அழைத்திருக்கிறான். அவன் இட்டிருக்கிற பணியோ மிகப் பெருமை வாய்ந்தது. அதனைச் செய்து முடித்துவிட்டால் இராசராசனின் பெயரோடு சிற்பி இனியனின் பெயரும் சேர்ந்து ஒலிக்கும், கலை உலகத்தில் ! ஆனால் அந்தப் பேறு விரைவில் கிட்டாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/41&oldid=1699678" இலிருந்து மீள்விக்கப்பட்டது