உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

அதைப்போலவே அரசு அலுவலருக்கு 1998-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு தருகின்ற சம்பளத்தை, முன்தேதியிட்டுத் தருவதாக 1998-ல் அறிவித்து 96 முதல் முன்தேதியிட்டு 98-ஆம் ஆண்டு அலுவலக உதவியாளருக்கு 2,500 ரூபாய் என்றிருந்ததை 3,222 ரூபாய் என்று ஆக்கியது தி.மு.கழக ஆட்சி. இளநிலை உதவியாளர், தட்டச்சர், டெலிபோன் ஆபரேட்டர், ஓட்டுநர் இவர்களுக்கு 3,245 ரூபாய் சம்பளம். அதை 4,201 என்று ஆக்கியது. தி.மு.கழக ஆட்சி. தலைமை உதவியாளருக்கு 3,617 ரூபாய் என்றிருந்ததை 4,501 ரூபாய் என்று ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இன்னும் சில பேர் கூட சொல்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியிலே காவல் துறையினரும், அரசு அலுவலர்களும் பெற்று வந்த ஊதியத்தைவிட பல மடங்கு அதிகமாக தி.மு.கழக ஆட்சியிலே உயர்த்தினோம். மத்திய அரசு அலுவலர்களின் ஊதியத்திற்கு சமமாக கழக ஆட்சியிலே உயர்த்தித் தரப்பட்டது. இதன் காரணமாக சில பேர், "ஏங்க, இந்த அரசாங்க அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறீங்க, அவர்களெல்லாம் சும்மாவா வேலை பார்க்கிறார்கள் ? ஆபீசுக்குச் சென்றால் மேஜை டிராயரைத் திறந்து எங்களிடம் காட்டுகிறார்கள். அதிலே போட வேண்டியதைப் போடுங்கள் என்கிறார்கள். எதற்காக சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும்?" என்று கேட்கின்ற பொதுமக்களில் சில பேரை நான் அறிவேன்.