உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஏற்கெனவே வழங்கப்பட்டிருப்பது நினைவிருக்கலாம் என்று கருது கிறேன். முழுமையான மாநில திட்டக் குழுவினுடைய அறிக்கை விரைவிலே வைக்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள் கின்றேன். திட்டங்கள் மாவட்ட அளவிலும் செயல்படுத்தப்பட வேண்டும், மாநில மாவட்ட அளவிலும் தீட்டப்பட வேண்டும் என்கின்ற கருத்தை ஏற்கெனவே இந்த அரசு ஏற்றுக்கொண்டு. அதற்கான வழி வகைகளையெல்லாம் ஆராய்ந்து,அந்த காரியங் கள் கவனிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, அந்த மாவட்ட அளவிலே தீட்டப்பட்டிருக் கின்ற திட்டங்கள் எல்லாம் அந்த வளர்ச்சி வாரியத்தினுடைய துணையோடு நடைபெறுவதற்கு முதற் கட்டமாக நான்கு மாவட் டங்கள் - தருமபுரி, இராமநாதபுரம், தஞ்சை, கோவை ஆசி கிய நான்கு மாவட்டங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இந்த மாவட்டத் திட்டங்கள் நல்ல முறையிலே நிறை வேறுவதற்கு இயலும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள் வேன். நண்பர் பலராமன் நேற்றையத் தினம் பேசும்போது 'சிப்காட்' என்று ஒரு நிறுவனம் அறிவிக்கப்பட்டதே, அது எங்கே இருக்கிறது, ஏதாவது நடக்கிறதா, அதில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டதா?" என்றெல்லாம் பெரிய சந்தேகத்தை எழுப்பினார் கள். இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் 46.82 கோடி ரூபாய் முதலீடுகளை ஊக்குவித்து, 9,000 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. என்பதை மாத்திரம் நான் அவர்களுக்குப் பதிவாகத் தரக் கடமைப்பட்டிருக்கின்றேன். இது வரை அந்த நிறுவனம் 5 கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவி களைப் பல திட்டங்களின் கீழ் செய்யப்பட்டிருக்கின்றன. வட ஆர்க் காட்டிலேயிருந்து அவர்கள் சென்னைக்கு வருகின்ற வழியிலே கொஞ்சம் இராணிப்பேட்டைப் பக்கம் திரும்பிப் பார்ப்பார்களே யானால், அங்கே கூட இராணிப்பேட்டையிலே ஐந்து பெரிய தொழிற்சாலை பல நடுத்தரத் தொழிற்சாலைகளும், இந்த 'சிப்காட்' டின் உதவியின் காரணமாக அங்கே தொடங்குவதற்கான வேலை கள் எல்லாம் நடந்து கொண் டிருக்கின்ற காட்சியைப் பார்க்க முடியும். ஆகவே 'சிப்காட்' என்ன ஆனது என்று கேட்டால் மறுநாள் பத்திரிகைகளிலே கொட்டை எழுத்துக்களிலே வந்து விடுகிறது. அதை மாத்திரம் படிக்கின்றவர்கள், ஏதோ 'சிப்காட்' என்று ஒன்று ஆரம்பித்தார்கள். அது உடனடியாக போயிற்று. தொலைந்து போயிற்று என்கின்ற ஒரு எண்ணத்தை அழிந்து அவர்களுடைய உள்ளத்திலே பதிய வைத்துக் கொள்கின்றார்கள். ஆகவே இது போன்ற விஷயங்களைப் பேசுகிற நேரத்தில் நாம் ஒரு முறைக்கு இரு முறை அதைப்பற்றி தீர்க்கமாக. தெளிவாகக் கேட்டறிந்து அவைகளைப் பற்றிப் பேசுவது நல்லது என்பதற்காகச் சொல்கிறேனே யல்லாமல் வேறல்ல! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/61&oldid=1701973" இலிருந்து மீள்விக்கப்பட்டது