உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே.டி. 36 முதல்வர் : கே. டி. கே. அவர்கள் பாரம்பரியம் பற்றி எல்லாம் பேசி, சிங்காரவேலுவை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்று சொன்னார். "யார் யாரைப் பற்றியெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள்; சிங்காரவேலர், சக்கரைச் செட்டியார் இவர்களைப்பற்றி எல்லாம் பேசவில்லை" என்று குறிப்பிட்டு பெரியாரோடு நிறுத்தினார். அண்ணாவை அந்த நேரத்தில் அவர் மறந்த காரணத்தால் சொல்லாமல் இருக்கலாம். அதனால் அவர் மனதில் மனதில் அண்ணா இல்லை ல்லை என்று நான் கருத மாட்டேன். சிங்காரவேலுவை யாருக்குத் தெரியும், என்.வி. என்.க்குத் தான் தெரியும் என்றார். உடனே அரங்கண்ணல் எல்லோருக்கும் தெரியும் என்றார். அவர்

66 ,, நூல் ஒரு புத்தகம், "மனிதருள் மாமேரு' லெனினைப் பற்றி எல். வி. மித்ரோகின் என்பவர் எழுதிய என்பவர் எழுதிய புத்தகம் ; அதிலே குறிப்பிடுகிறார் "மதம் பற்றி லெனின் என்ற தலைப்பில் 1933-இல் அவரது மேற்பார்வையில் ஒரு நூ வெளி வந்தது. அரியதொரு புத்தகமான இதனைக் கண்டு பிடிப்பது எளிதாயிருக்கவில்லை. ராமசாமி நாயக்கரிடமோ, முருகேசனிடமோ இந்த நூல் இல்லை. குத்தூசி" என்ற தமிழ் வாரப் பத்திரிகையின் ஆசிரியரும், ஒரு பெரும் புத்தக விரும்பியும் அரிய நூல்களைச் சேகரிப்பவருமான திரு. எஸ். குருசாமியை அணுகுமாறு அவர்கள் எனக்கு ஆலோசனை கூறினர். சென்னை நகருக்கு சற்று வெளியேயுள்ள ஒரு சிறிய வீட்டிற்கு நாங்கள் சென்றோம். நுழைவாயிலில் குருசாமி யும், குமாரி ருஷ்யாவும் இங்கே வசிக்கின்றனர் என் அறிவிப்புப் பலகையை நாங்கள் கண்டோம். திரு குருசாமி எங்களை அன்புடன் வரவேற்று அவரது அழகிய மகள் குருசாமி ருஷ்யாவை எங்களுக்கு அறிமுகம் செய்தார். நானும் மறைந்த எனது மனைவியும்-அவர் ஒரு கம்யூ னிஸ்ட் -சேர்ந்து எங்கள் மகளுக்கு 'ருஷ்யா' என்று பெய ரிட்டோம். இப்போது, அவள் பெரியவளாகி டாக்டராகி யுள்ளாள். சுயமரியாதை இயக்கத்தில் பங்கு கொண்டவன் என்ற முறையில் நான் 200 குழந்தைகளுக்கு லெனின் என்று 6 6 6 6 ற பெயர் சூட்டியிருக்கிறேன். அவர்களில் பலரும் அதன் விளைவாகக் கஷ்டப்பட வேண்டியிருந்தது" என்று. தங்கமணி : எங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சி முதல் மாநாடு கான்பூரில் 1925-இல் ல் நடைபெற்றது. அதற்குத் த லை மை தாங்கியவர் சிங்காரவேலர் என்ற வகையில்தா நான் அதைக் குறிப்பிட்டேன். ன் முதல்வர் : உங்களுக்குத் தொடர்பு இல்லாமல் போய் விட்டது என்கிற கருத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். அந்தப் புத்தகத்தைத் புத்தகத்தைத் தேடவே குருசாமி வீட்டிற்குத்தான் வந்தார்கள். அதற்குப் பிறகு, விடுதலை ஆசிரியர் வீரமணி தனது பத்திரிகையின் வாசகர்கள் யாரிட மேனும் அந்நூலின் பிரதி இருக்குமா எனக் கேட்டு பத்திரி கையில் ஒரு கோரிக்கை விடுத்ததின் மூலம், அந்த நூலை ஒருவர் கொண்டு வந்து என்னிடம் காடுத்தார்" என்று அந்த ஆசிரியர் குறிப்பிடுகிறார்.