உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பொல் ன்னன் கைது செய்யப்பட்டுப் போலீசாரால் அழைத்து வரப்படுகிறான் என்ற செய்தி திருக்கைவால் முனியாண் டிக்குக் கிடைத்தது. அவன் விரைந்தோடி வந்து வீராயியின் காதில் அதைச் சொன்னதுதான் தாமதம், அந்தச் செய்தி காட்டுத் தீயாக மாறிற்று. இப்படியும் சில பிறவிகள். - மாரியின் வீட்டில் உள்ளவர்கள் யாரும் வீராயிக்கோ முனி யாண்டிக்கோ எந்தத் தீங்கும் செய்தவர்களுமல்ல செய்ய நினைத்தவர்களுமல்ல! அப்படியிருந்தும் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு பகை அந்தக் குடும்பத்தின் மீது வீராயிக்கு ஏற்பட் டிருந்தது. முனியாண்டியின் சுபாவம், எப்படியாவது ஒரு அடிதடி விவகாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ப தாகும். அதனோடு, அவனுக்குச் செங்கமலத்தின் மீது ஒரு கண் இருந்தது. என்றைக்காவது ஒரு நாள் பசிக்கும்போது சாப்பிடலாம் என்று விட்டு வைத்திருந்தான். அதையும் நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்து தோற்றுப்போய்விட்டான். இதைத் தவிர மாரி வீட்டார் மீது வீராயி முனியாண்டி விரோதம் கொள்ள எந்த வகையிலும் மாரி வீட்டார் காரணமாக இருந்ததில்லை. - - ஊர் வம்பு பேசாவிட்டாலோ - யார் மீதாவது அபவாதம் மத்தாவிட்டாலோ சில பேருடைய உள்ளத்தில், சொரிந்து விட்டு அடக்கமுடியாத ஒருவித அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பை அவர்கள் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அடக்கிக் கொள்ளத் துடிப்பார்கள். அந்தப் பணி முடிந்தபிறகே அன்றிரவு தூக்கம் அவர்களுக்கு நிம்மதியாக வரும். அத்தகையோர் வரிசையில் முன்னணியில் நிற்கக்கூடிய முனியாண்டியின் மனைவி வீராயி, ஏற்கனவே இயற்கையால் தண் டிக்கப்பட்ட தனது ஊனமுற்ற உடலுடன் ஊர் முழுதும் 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/125&oldid=1702545" இலிருந்து மீள்விக்கப்பட்டது