உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாப்பிள்ளை வீட்டாரோடு வந்திருந்த ஒரு மூதாட்டி; “ஏன் பெண்ணை அழைத்து வரலாமே!” என்று குரல் கொடுத்தாள். காமாட்சியின் குழந்தையைத் தன் கையில் தூக்கிக்கொண் டிருந்த வேணி, காமாட்சியை அலங்காரப் பதுமையாக அந்தக் கூடத்துக்கு அழைத்து வந்தாள். மாப்பிள்ளை, காமாட்சியைப் பார்த்ததும் தேன் குடத்தில் விழுந்த வண்டாகிவிட்டார் என் பது அவர் முகத்தில் பெரிய எழுத்துக்களில் தீட்டப்பட்டிருந்தது! மாப்பிள்ளையின் பெற்றோருக்கும் பூரண திருப்தி! பெண் பிடித் திருக்கிறது என்பதை மாப்பிள்ளை, தன் பெற்றோருக்குத் தெரி விக்க வேண்டிய முறையில் தெரிவித்துவிட்டார். எல்லாம் மன நிறைவா இருக்கு! கல்யாண தேதியைப் பாருங்கோ!" என்று பஞ்சாங்கக்காரரைப் பார்த்துப் பெண்ணின் தந்தையும், மாப்பிள்ளையின் தந்தையும் ஒரே சமயத்தில் சொன் னார்கள். பண் பஞ்சாங்கத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போதே, ணையார் வீட்டு வாசலில் பொன்னனை ஏற்றி வந்த 'போலீஸ் வேன் வந்து நின்றது. 122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/124&oldid=1702544" இலிருந்து மீள்விக்கப்பட்டது