உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலிலே விழுந்து நான் கேக்கிறேன்; எனக்கு மாங்கல்யப் பிச்சை கொடு!’’ பார்வதி வாய்விட்டு அழத் தொடங்கியதும்; காமாட்சி வேறு வழியில்லாமல் தாயாரைத் தேற்றி, "சரிம்மா! சரிம்மா! உங்க இஷ்டப்படியே நடக்கிறேன்” என்று கூறிவிட்டு அவள் அறைக்குள் வேகமாகச் சென்றுவிட்டாள். - சென் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு குழந்தையை ஏதோ ஒரு வகையான வெறுப்புடன் இழுத்து அணைத்தவாறு பார்வதியம்மாளும் தன் அறைப் பக்கம் றாள். அந்தக் குடும்பத்தின் நிலைமை கண்டு, சோமுவும் வேணியும் தங்களுக்குள்ளாக வேதனைப்பட்டனர். பழுத்த வைதீகக் குடும்ப மொன்றில் ஐதீகங்களையும், சாத்திர சம்பிரதாயங்களையும் புரட்டி றியக்கூடிய புயல் ஒன்று எவ்வளவு வேகமாக அடிக்கிறது எண்ணி அவர்கள் வியந்தனர். என மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் மளமளவென்று நடந்தேறின. பார்வதியம்மாள், மாடியிலிருந்து சோமுவையும் வேணியையும் அழைத்து அவர்களையும் விரைவில் தயாராகுமாறு கேட்டுக்கொண்டாள். கூடத்தில் விலை உயர்ந்த ஜமக்காளங்கள் விரிக்கப்பட்டன. ஊரில் உள்ள மிக முக்கியமான பிரமுகர்கள் வீட்டு ஆடவரும் பெண்டிரும் சுமார் இருபது முப்பது பேர் வந்து பண்ணையார் வீட்டுக் கூடத்தில் அமர்ந்தனர். அவர்களுடன் சோமுவும் வந்து உட்கார்ந்துகொண்டான். சோமுவைப் பண்ணையார், ஊர்ப் பிரமுகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதில் ஒரு பெரியவர் சோமுவைப் பார்த்து, 'தம்பி, நல்ல மாதிரியா தெரியுதே! நீங்களாவது அந்த மகேஸ்வரனுக்கு புத்தி சொல்லக் கூடாதா?” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ‘அவன் பேச்சை விடுங்கள்! அவன் எனக்குப் பிள்ளையே இல்லை! சாதி கெட்டவன் பேச்சு எதுக்காக?" என்று அந்த வேண்டுகோளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பண்ணையார். எதிர்பார்த்தபடி மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள்! அறுபது வயதைத் தாண்டிய ஒரு பெரிய மனிதர் நெற்றியில் விபூதியுடனும், அவரையொட்டி அவரது மனைவியார் அகலமான குங்குமத் திலகத்துடனும் முதலில் வந்தனர் காரிலிருந்து இறங்கி! மாப்பிள்ளையும் பெண்ணை நேரில் பார்க்க வந்திருந்தார். அழகான உருவம். கம்பீரமான தோற்றம். சிவந்த மேனி. மாப்பிள்ளையைப் பார்த்ததுமே காமாட்சிக்குப் பொருத்த மான ஜோடியென்று எல்லோருடைய வாய்களும் பாராட்டுக்களைப் பொழிந்தன! மாப்பிள்ளை வீட்டாரைப் பண்ணையாரும் பார்வதி யம்மாளும் மகிழ்ச்சி ததும்ப வரவேற்றனர். எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. 121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/123&oldid=1702543" இலிருந்து மீள்விக்கப்பட்டது