உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஒரே முத்தம் (வெளியில்) புத்த:- உம்,பாம்பின் மனைவி பாம்புதான். குமரி:- அப்படியிருந்தால் என்னைக் காப்பாற்றியிருக்க மாட்டாள். நீங்கள் நம்புங்கள் இளவரசே! (உள்ளே) சித்ரா :- களங்கமற்ற இந்த உள்ளத்தை எப்படி ஏமாற்று வது? முடியாது, அன்பா! என்னை மன்னித்துவிடுங்கள். விபீஷணன் குரலும் நிழலும்:- "மன்னிப்பதென்ன? மகுடத் தைக் கைப்பற்றச் சதி செய்த தாக நாளை வழக்கு; மரண தண் டனை அதற்குத் தீர்ப்பு" சித்ரா:- பயங்கரமான தீர்ப்பு! அன்பா! நீங்களில்லாமல் சித்ராவுக்கு வாழ்வு ஒரு கேடா? (வெளியே) . குமரி:- சித்ரா, குழந்தை மனம் படைத்தவள். கபடம் இன்னதென்றே தெரியாது. அவளை நீங்கள் நம்பவேண்டும். (உள்ளே) சித்ரா ;- குழந்தை மனம்! எனக்கா அவளுக்கா? சூது தெரியாத பெண், இவளிடமா சூழ்ச்சியை ஆரம்பிப்பது? (தேடித் தேடிப்பெட்டியைத் திறந்து கடிதங் களை எடுத்தவள், மீண்டும் வைக்கிறாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/50&oldid=1702656" இலிருந்து மீள்விக்கப்பட்டது