உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 18 நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும், இன்று நடை பெற்ற ஊர்வலம் ஓர் மாப்பிள்ளை ஊர்வலம்போல' இருந்தது. என்னை அழகாக அலங்கரிக்கப்பட்ட காரில் அமர்த்தி மாப்பிள்ளையைப்போல் அழைத்து வந்தீர்கள். மாப்பிள்ளை என்பதால் ஒரு பெண்ணை யும் திருமணம் செய்து வைத்திருக்கிறீர்கள். அந்த பெண்தான் வெற்றிச் செல்வி! அந்த வெற்றிச் செல் வியை எனக்குத் தந்திருக்கிறீர்கள். நான் வெற்றி யைப் பெற்றிருக்கிறேன்; நான் அதற்குத் தாலி கட்டி யிருக்கிறேன். எங்கள் இருவரையும் மறுவீடு அழைத்து விருந்து நடத்தி ஊர்வலம் விட்டிருக்கிறீர் கள். ஆகவே திருமணம் செய்துகொண்ட நான் உங்களுக்கு உறுதிதர வேண்டாமா? "நான் வெற் றியை ஒழுங்காக வைத்துக் குடும்பம் நடத்துவேன். ஒழுங்காகக் காப்பாற்றுவேன். ஆகவே, சம்பந்தி வீட்டாரே! கவலைப்படாதீர்கள். கவலைப்படாதீர்கள்' என்று உறுதி தருகிறேன். வருகிற தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று- ஏப்ரல் பதினான்காம் நாள் அன்று சென்னை சட்ட மன்றத் திலே அறிஞர் அண்ணா அவர்களும், பக்கத்திலே நானும், அன்பழகனும், ஆசைத்தம்பியும் இன்னும் மற்றவர்களும் காமராசருக்கு நேராக - மந்திரிகளுக்கு. நேராக-தூங்குமூஞ்சி எம். எல். ஏக்களுக்கு எதிராக உட்காரப்போகிறோம். இனிமேல் தூங்குவார்களா அவர்கள்? தூங்கத்தான் விடுவோமா? எங்களுடைய குரல் அங்கு ஒலித்துக்கொண்டே இருக்காதா? தாய்மார்களை எப்படித்தான் நான் பாராட்டுவது' என்றே புரியவில்லை. தொகுதிக் கூட்டங்களிலே .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/18&oldid=1703205" இலிருந்து மீள்விக்கப்பட்டது