உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் பேசும்போது 19 சொன்னேன் உங்கள் வீட் - 66 90 நான் டாரும் தெருவாரும் எப்போதும் நினைவிலிருத்திக் கொள்ள வீட்டு வாசல்களில் உதய சூரியன் கோலத்தைப் போடுங்கள் - அந்தக் கோலம் போட புள்ளி வைக்கவேண்டிய அவசியங்கூட இல்லை. ஒரு வளைவான கோடு; மேலே ஐந்தாறு நேர் கோடுகள் இவ்வளவுதான். கோலம் முடிந்துவிடும்-கொள்கை. யும் நிறைவேறி விடும்-என்று! மறு தினத்திலிருந்தே உதய சூரியன் கோலமில்லாத வீடுகளை காணவே இல்லை. அதுபோல பலப்பல இடங்களிலே கோலமிட்டார்கள் தாய்மார்கள். கொள்கைக்கு உறு துணையாக வெற்றியுந் தேடித்தந்தார்கள். உதாரண மாக தண்ணீர்ப்பள்ளி என்ற இடத்திலே பெண்கள் வோட்டுச் சாவடியில் வைக்கப்பட்டிருந்த வோட்டுப். பெட்டிகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டபோது ஒரு விசித்திரத்தைக் கண்டோம். அந்த இடத்திலிருந்த மாட்டுப் பெட்டியை யெடுத்து வோட் டுகளை எண்ணக் கவிழ்த்தபோது ஒரு வோட்டுகூட இல்லை-காங்கிரசு வோட் பெட்டியில் ஒரு வோட் கூட இல்லாதிருந்த - இந்தியாவிலேயே-ஒரே பெட்டி, அந்தத் தண்ணீர்ப்பள்ளிப் பெட்டிதான். அத்தகைய பெருமைவாய்ந்த இந்தத் தொகுதியைக் குளித்தலைத் தொகுதி என்று நான் சொல்லமாட்டேன். இது என்னுடைய தொகுதி! ஆமாம்! சொந்தத்தோடு; உரிமையோடு; பாசத்தோடு; பற்றோடு சொல்லு கிறேன். இது கருணாநிதியின் தொகுதி! இங்கேதான் இப்போதும் வென்றேன்; அடுத்த முறையும் வெற்றி பெறுவேன்; எப்போதும் வெற்றி பெறுவேன் உங்கள் ஆதரவோடு. வணக்கம்! 0 மரு [லாலாபேட்டை 26-3-574]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/19&oldid=1703206" இலிருந்து மீள்விக்கப்பட்டது