உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 களுடைய குடிபடைகளும் நம்மை அழித்து ஒழித்து விட வேண்டுமென்று மிகமிகத் தீவிரமாகக் கவனம் செலுத்தினார்கள். இவ்வளவு எதிர்ப்புகளையும் சமாளித்து-பெரியார் அவர்கள் அடிக்கடி குறிப்பிடு வார்களே, திராவிடர் கழகந்தான் எதிர்நீச்சல் போடும் இயக்கம் என்று; அந்த நிலைமாறி எதிர்நீச் சல் போடுகிற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழ கந்தான் என்ற நிலை நாட்டிலே ஏற்பட்டது. 99 இன்று காங்கிரசு உயர்ந்திருப்பதாகத் தோன்ற லாம்; குறிப்பாக அதன் இன்றையத் தலைவர் காமராசரும் உயர்ந்திருப்பவராகத் தோன்றலாம்; வெற்றிபோதையிலே-ஜெயமடைந்திருக்கிற நிலைமை யிலே "நாங்கள் தான் இந்த நாட்டுப் பெரியகட்சி " என்றும் சொல்லிக்கொள்ளலாம்; பெரும்பாலான மக்கள் எங்களைத்தான் ஆதரித்தார்கள் என்றும்கூறிக் கொள்ளலாம். காமராசரா? அவர் அண்ணாத்துரையை விட உயரமானவர்! காமராசரா ? நெடுஞ்செழியனை விட மதிப்பு வாய்ந்தவர்! என்று காமராசரே கூட எண்ணிக் கொண்டிருக்கலாம் அவரது ஆதரவாளர் களும் கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால், காமராச ருடைய அந்த உயரம் எத்தகைய உயரமென்பதை நாமும் மறந்துவிடவில்லை; நாடும் மறந்துவிட முடி யாது. நாம் பொய்க்கால் குதிரை ஆட்டக்காரர்களைப் பார்த்திருப்போம். மாலை ஐந்து மணிவரை அவனது உயரம் ஐந்து அடிகள் தான் இருக்கும். அதற்குப் பிறகு அவன் இரவெல்லாம் ஏழடி உயரமாகத் தோன்றுவான். அவனுக்கு எப்படி வந்தது அந்த உயரம்? இரவு நேரத்தில் அவன் புரவி ஆட்டம் செய் வதற்கு முன்பாக, குதிரையைத் தன் உடலோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/64&oldid=1703251" இலிருந்து மீள்விக்கப்பட்டது