உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நண்பர்கள் சிலரும், இன்று அந்த இயக்கத்திலே இருக்கும் சிலரும் கொடிக்கு என்ன அமைப்புத் தரலாம் என்று யோசித்துக்கொண்டே யிருந்தோம். இரவு பனிரெண்டு மணிக்கு மேலாகி விட்டது. பெரியார் அவர்கள் மாடியிலே காத்துக்கொண்டிருந் தார்கள். கடைசியில் கொடிக்கான உருவம் ஒன்றை யும் முடிவு செய் விட்டோம்! விட்டோம்! கையிலே கருப்பு மை இருந்தது. அதைக் கொண்டு கருப்பு நிறத்தை வரைந்து விட்டோம். நடுவிலே வட்டமாக சிகப்பு வைத்தாக வேண்டும். என்ன செய்வது? அலுவலக நிர்வாகியோ அறையைப் பூட்டிக்கொண்டு போய் விட்டார். அந்த நேரத்தில் நான் அவசரம் அவசர இரத்தம் கை விரலில் காயம் உண்டாக்கி எடுத்து - அதை கொடிக்கான சிகப்பு நிறமாக வைத்து - பெரியாரிடம் கொண்டுபோய்க் காட்டி னேன். இதுதான் நமது கொடியென்று அறிக்கை யும விட்டார்கள் பெரியார் அவர்கள் அந்தக் கொடிதான் இன்றும் திராவிடர் கழகக் கொடியாகப் யறக்கிறது! மாக - - க டி அந்தக் கொடிதான் - கருணாநிதியின் கட்டை விரல் இரத்தத்திலேயிருந்து சிகப்பு எடுக்கப்பட்ட அதே கொடிதான் - கருணா நிதியை ஒழித்துவிட குளித்தலையிலே பறந்த்து என்றால் உள்ளபடியே நாம் கண்ணீர்விடாமலிருக்க முடியுமா C சு எவ்வளவு ே ? என்ன பேச்சு ! எவ்வளவு கேவலமான தாக்கு தல்கள்! எத்தனை மோசமான கணைகள் ! அவ்வள வையுந் தாங்கிக் கொண்டுதான் நாம் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். பதினைந்து இடங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/74&oldid=1703260" இலிருந்து மீள்விக்கப்பட்டது