உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 86 - இவர்களுக்குக் குழந்தை பிறந்து விடுமா?" என்று கேட்கிறான். பிறகு அடுத்த நிலைமை இரண்டு வாரங்கள் கழித்து, அவர்களை கடற்கரையிலே, வெண் மணலிலே, வெள்ளி நிலவுக்குக் கீழே, அலைகளிலே தங்களுடைய கால்களை நனைத்துக்கொண்டு அமர்ந் திருக்கிற காட்சியைப் பார்க்கிறான் அவன்; அப்போது, 'இப்படி அலைகளிலே கால்களை நனைத்துக்கொண்டு, சீதள நிலவுக்குக் கீழே சிங்காரமாக அவளும்;ஒய்யார மாக அவனும் உட்கார்ந்திருந்தால் இவர்களுக்குக் குழந்தை பிறந்து விடுமோ ?" என்று கேட்கிறான். பிறகு ஒரு நாள், தென்றல் வீசுகின்ற சோலையிலே மந்தமாருதத்தை ரசித்தபடி அந்த மங்கையும் அந்த அழகனும் காதல் கீதம் இசைப்பதைப் பார்த்து, இவர்கள் இருவரும் இப்படிக் காதல் இசை பாடி விட்டால் மட்டும் குழந்தை பிறந்து விடுமா? " என்று கேட்கிறான். ம ம " விட்டால் அதற்கும் பிறகு அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறுகின்ற அழைப்பிதழைக் காணு கின்றான். அப்போதும்கூட "இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து விட்டால் குழந்தை பிறந்து விடுமா?' என்று கேட்கிறான். திருமணம் நடந்து முடிந்த பிறகு பெற்றோர்கள் வைதீகர்களாக இருந் தால் நாள் நட்சத்திரம் பார்த்து; அல்லது காதலர் கள் அவசரக்காரர்களாய் இருந்தால் நாள் நட்சத் திரத்திற்கே நேரமில்லாமல்; ப ள் ளி யறைக்குள்ளே புகுந்து விடும் நேரத்தில், வெளியே நின்று இவர்கள் பள்ளியறைக்குள் சென்றுவிட்டால் குழந்தை பிறந்துவிடவாபோகிறது?" என்று கேட் கிறான். இப்படியே அவன் கேட்டுக் கொண்டேயிருந் தால் - அவன் ஏன் இப்படி அவர்களைச் சுற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/86&oldid=1703272" இலிருந்து மீள்விக்கப்பட்டது