உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 யிலே கூட, அந்தக்குழந்தை பிறக்க நேரிடலாம். ஆகவேதான், அவசரக்காரர்களே! அவசரக்காரர் களே ! கண்ணோடு கண்ணிணை நோக்கக்கூடிய நேரத் திலே, நீங்கள் கேட்காதீர்கள் குழந்தை பிறக்குமா என்று. பிரசவ அறையை-ஆஸ்பத்திரியைப் பார்த்து விட்டு, தகதகவென தங்க நிறமாக ஜொலிக்கிற அந்த அழகான திராவிட நாடு குழந்தையைப் பார்த்து விட்டு, நீங்கள் கேட்பீர்கள் "திராவிட நாடு கிடைத்து விட்டால்கூட, திராவிட நாடு கிடைத்து விடுமா என்று. அத்தகைய அரசியல் அப்பாவிகள்! அவர்களுக்கு இடையே தான் திராவிட முன் னேற்றக் கழகம் எட்டாண்டு காலமாகத் தன்னுடைய நீண்ட லட்சியப்பயணத்தை நடத்தி வந்திருக்கிறது. அந்தப் பயணத்திலேதான், திராவிட நாடு கிடைப்ப தற்கான பலப்பல மார்க்கங்களிலே ஒன்றாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்திற்குச் செல்லுகிறதே ஒழிய, சட்டமன்றத்திலே அறிஞர் அண்ணா அவர்களுடன் பதினான்கு பேர்கள் அமர்ந்து விடுகின்ற காரணத்தால், நம்முடைய லட்சியம் பூர்த்தி யாகி விட்டது என்றல்ல பொருள். 1949-ஆம் ஆண்டு கண்ணீர்த்துளிகளுக்கு இடையே. கனத்த மழைக்கிடையே, அறிஞர் அண்ணா அவர்களுடைய வேதனை நிரம்பிய பிரசங்கத்துக்கு இடையே எழுந்த திராவிட முன்னேற்றக் கழகம், சட்டமன்றத்துக்குச் சென்றதும், தன்னுடைய கொள்கை, லட்சியம் நிறைவேறி விட்டது என்று அந்த சரித்திரப் புத்தகத்தினுடைய கடைசி வரியை எழுதி முடித்து விட்டு நாங்கள் சட்டமன்றத்துக்குச் ய -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/88&oldid=1703276" இலிருந்து மீள்விக்கப்பட்டது