உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாராட்டாம்! என்று கிண்டலும் கேலியும் கலந்து பேசுகிறார்கள். நான் சொல்கிறேன் அந்த நூற்றைம் பது பேர்களையும் தராசின் ஒரு தட்டிலே வைத்து, மறு தட்டிலே அறிஞர் அண்ணா அவர்களை மட்டுமே வைத்தால் என்ன நடக்கும்? எந்தப் பக்கத்து தட்டு தாழும்? எந்தப் பக்கத்திலே நிறை அதிகம் இருக் கும்? நான் சொல்லத் தேவையில்லை. அதை இந்த நாட்டு நீதிமன்றம்-மக்கள் மன்றம் - இந்த நாட்டுக்கு நல்லதொரு எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி பெற்ற வாக்காளர் பெருமக்கள் நன்கு உணரமுடி யும் ! அத்தகைய பீடும் பெருமையும் பெற்ற - வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைய தினம் தென்னகத்தின் வழிகாட்டியான அறிஞர் அண்ணா அவர்களை சட்ட மன்றத்திற்கு அனுப்பி வைக்கிறது! அவருக்கு எதிர்கட்சி ஏடுகளெல்லாம் பராக்குக் கூறி வரவேற்கின்றன. வருக வருக! தலைவனே வருக! தமிழே வருக! அரசியல் விற்பன் னரே வருக ! வித்தகனே - உத்தமனே வருக ! வருக!! என்று வாழ்த்தி வரவேற்பு நிகழ்த்தும் அளவுக்கு நம் தலைவனை சட்டசபைக்கு அனுப்புகிறோம். துணைக்கு நாங்கள் சிலரும் செல்லுகிறோம். நாங்கள் சட்டசபை யில் அமரப்போகிற அந்தக்காட்சியை - அந்த ஆனந் தத்தை தாயும் தந்தையும் எப்படிக் கனவுகண்டு அனுபவிப்பார்களோ, அதுபோல் தமிழகம் அனுப விக்கிறது. மணவறையில் மகனும், மகளும் உட்காரு கின்ற காட்சியைக் காணத்துடிக்கின்ற மாதாபோல பிதாபோல - அண்ணனைப் போல - சொந்தக்காரர் களைப் போல - பந்தம் பாசம் உள்ளவர்களைப்போல- தமிழகம், அறிஞர் அண்ணா அவர்கள் சட்டசபையில் - - 68 க க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/68&oldid=1703277" இலிருந்து மீள்விக்கப்பட்டது