உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 மளிக்கும் சந்தோஷமே" என்று பாடினார்கள். "ஏ சட்டசபையே ! சட்டசபைக் கட்சியே ! சட்டசபை காங்கிரசு மன்றமே! நீ படித்தவருக்கும், படிக்காத வருக்கும் களிப்பைத் தருகிறாய் " என்ற பொருளில் காமராசர் கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார். இந்த விதமாக காமராசர் மீண்டும் முதல் மந்திரியாக முடி புனைந்து திராவிடத்தை - தமிழகத்தை - திராவிடப் பெருங்குடி மக்களின் அபிப்பிராயத்துக்கு விரோத மாக - அவர்களின் நலனுக்குப் பாதகம் தரக்கூடிய வகையில் - ஆட்சிச் சக்கரத்தைக் கையிலேந்தி யிருக் கிறார். உண்மையில் ஜனநாயகக் கோட்பாடுகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்களும், ஜன நாயக உரிமை களை மதிப்பவர்களும், தேர்தல் எப்படி நடக்க வேண்டும் என்று கருதுகிறார்களோ அவர்களும், அரசியல் தெளிவு படைத்தவர்களும், அரசியல், அதிகார மூலபலமின்றி - உருட்டலும் மிரட்டலு . மின்றி நடைபெற வேண்டும் என்று கருதும் உத்தமர் களும், நல்லவர்களும் அறிவார்கள். இன்றைய தினம் அமைகின்ற ஆட்சி - காமராசர் தலைமையிலே அமை கின்ற ஆட்சி எந்த அளவிலும் இந்த நாட்டை ஆளும் சக்திபெற்றதல்ல என்பதை ! காமராசரது தலைமையிலே நூற்றைம்பதுபேர் கள் இருக்கிறார்களே! நீங்கள் பதினைந்துபேர்கள் தானே! என்று கேலிபேசும் நமது பங்காளிகள் - நம் குடும்பத்துச் சகோதரர்கள் - எப்படி யெல்லாம் கெக் கலிப்புக் கொட்டுகிறார்கள்! என்னென்ன பாராட்டு கள்! நுங்கம்பாக்கத்திலே பாராட்டாம் ஆசைத்தம்பிக் கும், கருணாநிதிக்கும் ! காஞ்சியிலே - மதுரையிலே பாராட்டாம் அண்ணாத்துரைக்கு ! சம்பத்துக்குப் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/67&oldid=1703254" இலிருந்து மீள்விக்கப்பட்டது