உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 66 காமராசர் எத்தகைய தகுதியால் மீண்டும் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை நாம் சொல்லா விட்டாலும் - திராவிடர் கழகத் தோழர்கள் உணரா விட்டாலும் - அல்லது உணர்ந்து வெளியிட மறுத் தாலும் - காமராசரின் சட்டசபைக் கட்சிக் கூட்டத் தின் போது கடவுள் வணக்கம் பாட வந்த அம்மை யார் - சௌந்திரம் ராமச்சந்திரன் என்பார் வெகு அழகாக காமராசரைக் கிண்டல் செய்வதன் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். பாடவந்த இடமோ காங்கிரசுக் கட்சிக் கூட்டம். பாடுவதோ காங்கிரசுக் கட்சி எம்.எல். ஏ., என்ன பாடி இருக்கவேண்டும்? எவ்வளவோ கடவுள் வணக்கப் பாடல்கள் இருக்கின் றனவே! வேறு பிள்ளையார் வாழ்த்தும் இருக்கிறது. 66 "பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை - நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத்தமிழ் மூன்றுந் தா " இதைப் பாடியிருக்கலாம்! ஆனால், பாடவில்லை. ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்......." என்று துவங்கும் சரஸ்வதி தோத்திரம் இருக்கிறது; பாடி யிருக்கலாம்.ஆனால் அதையும் பாடவில்லை. அல்லது தேவாரத் திருப்பதிகங்களில் ஒன்றைப் பாடியிருக்க லாம் ; அப்படியும் பாடவில்லை. இவை அனைத்தை யும் விட்டுவிட்டு - எப்படியாவது காமராசரைக் கிண் டல் செய்யத்தான் வேண்டும் என்ற எண்ணத்தால் அந்த அம்மையார்," கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே" என்று பாடினார்கள். படித் தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் சந்தோஷ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/66&oldid=1703253" இலிருந்து மீள்விக்கப்பட்டது