உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 . கழகத்தார் இல்லாததைப் பெற்றவர்கள். கம்யூனிஸ்டு கள் இருந்ததை இழந்தவர்கள். இதுதான் தமிழ் நாட்டினுடைய அரசியல் கணக்கு. இன்றைய நிலையில், அதை எப்படிச் சொல்லு கிறேனென்றால் நாம் இல்லாததைப் பெற்றோம். இது வரையில் சட்டமன்றத்திற்குச் செல்வதில்லை என்ற முடிவுடன் இருந்தோம். இப்போது எடுத்த எடுப்பி லேயே பதினைந்து பேர்கள் சென்றிருக்கிறோம். கம்யூனிஸ்டுகள் சென்ற தடவை முப்பது பேர்களோ நாற்பது பேர்களோ இருந்தார்கள் சட்டமன்றத்தில். இன்றைய தினம் விரல்விட்டு எண்ணக்கூடிய அள வுக்கு - ஒரு கைகூடத் தேவையில்லை, விரலை மடக்கி விடலாம். நான்கே பேர்கள் இன்றைய தினம் இருக் கிறார்கள். ஆகவே, அவர்கள் இருந்ததை இழந்த வர்கள் என்று குறிப்பிடுகிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதுபோல் மூன்றாவது. காங்கிரசுக் காரர்கள். சென்ற தேர் தலில் இவர்கள் பெற்ற இடங் கள் மிகமிகக் குறைவு. குறைந்த இடங்களைப்பெற்று மந்திரிசபை அமைக்கமுடியாமல், யார் யாரை இணைக் கலாமென்று தேடி பிரகாசத்தினுடைய ஐக்ய முன்ன ணிக்கு எதிராகப் பலரை, பல இடங்களிலிருந்து வர வழைத்து உனக்கு மந்திரிப்பதவி தருகிறேன் உனக்கு இன்னின்ன சலுகைகள் தருகிறேன், என்று ஆட்களைப் பொறுக்கி, எலும்புத் துண்டுகளுக்கும், பதவி இறைச்சிக்கும் ஆசைப்படுபவர்களை யெல்லாம் தன்னோடு இழுத்துக்கொண்டு - ஒரு பக்கத்திலே - மாணிக்கவேலரை- இன்னொரு. பக்கத்திலே வேறு பல சுயேச்சைகளை - சொல்லப்போனால் துரோகிகளை தன்பால் இழுத்துக்கொண்டு திக்கித்திணறி-வக்கு - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/94&oldid=1703643" இலிருந்து மீள்விக்கப்பட்டது