உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 க னுடைய நினைவுகளை அழித்துவிட்டு, பிறகு தன் மேலிருக்கிற இரத்தத்தைக் கழுவிக் கொள்ளுவற் காக வங்காளக்குடாக் கடலிலோ, இந்துமகா சமுத் திரத்திலோ சென்று குளித்துவிட்டு, மறுபடியும் இராமனுடைய அம்புறாத் தூணிக்கே வந்து உட்காரு கிறது; அல்லது படுக்கிறது; அல்லது தூங்குகிறது அது இராமாயணத்திலே வருகிற ஒரு அம்பு! அங்கே கலை இயற்கைக்கு முரண்பட்ட கலையாகி விடுகிறது. சங்க இலக்கியத்தில் மிகைபடுத்திக் கூறப்பட்டாலும் இயற்கையோடு இணைந்த கலையாக; இயற்கைக்கு முரண்படாத கலையாக இருக்கிறது. "கலையும் மனித னும்" என்று நினைக்கிற நேரத்தில், மனிதனுக்குத் தேவையான கலை இயற்கைக்கு முரண்படாத கலை யாக இருக்கவேண்டும். இயற்கையோடு இணைந்த கலையாக இருக்கவேண்டும்-என்று நாம் சொல்லு கிறோம். கலையிலே இத்தகைய நிகழ்ச்சிகள் மாத்திர மல்ல, ஓவியம் மாத்திரமல்ல; சிற்பம் மாத்திரமல்ல; நான் குறிப்பிட்டேனே அம்புகளைப்பற்றி-அதைப் போன்ற இலக்கியச் சுவைகள் ஏராளம்! ஏராளம்! கு. திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளை இவ் வளவு எழிலோடு எழுதியிருக்கிறார் என்றால், அதிலே இருக்கிற அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால்-இந்த முப்பாலையும் படித்துணர்ந்தோர் அவர் எவ்வளவு கலைச் சுவையோடு, எவ்வளவு கலையழகு சொட்டச் சொட்ட குறளை யாத்திருக்கிறார் என்பதை அறிவுள்ளோர்-கலாரசிகர்கள் - அத்தனை பேர்களும் நல்ல முறையிலே உணரமுடியும்! இங்கே பாடிக் காட்டப்பட்ட குறட் பாக்களும்; நடனமாடிக் காட்டப் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/125&oldid=1703674" இலிருந்து மீள்விக்கப்பட்டது