உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- விடுதலை வீரன் கூண்டிலே ஆட்சிக் கொடியை நெருப்பிலே போட்டார்கள் சட்டத்தைச் சுட்டெரித்தார்கள் - பாதுகாப்புப் படையின் மீதும் தங்கள் பாய்ச்சலை நடத்தினார்கள். பயங்கரமான நடவடிக்கைகள் பாழாக்கப்பட்டன பாதைகள் பல - பாலங்கள் இடிக்கப்பட்டன மந்திரிகள் கூடிப் பேசும் மாமன்றங்கள் மண்மேடாகி விட்டது. இவர்களது வெறிச் செயல்களால் விண் முட்ட நின்ற நமது கொடிக் கம்பத்திலே இவர்களது விடுதலைக் கொடியைப் பறக்கவிட்டு சுதந்திர கீதம் பாடினார்கள். பாசறைகளில் தீ கொழுந்து விடவும் பாராளும் வேந்தன் ஓய்வுபெறும் மாளிகையில் - வெள்ளம் நுழையவும் கோட்டை கொத்தளங் களில் காவல் புரிந்த வீரர்கள் ஓட்டமெடுக்கவுமான மூர்க்கப் போராட்டம் மூட்டிவிடப்பட்டது. அடுத்த நாட்டு மன்னரின் அவசர உதவி உடனடியாக நமக் குக் கிடைக்காமற்போயிருந்தால் ஆட்சியும் கவிழ்ந் திருக்கும்; இந்த அராஜகவாதிகளும் ஆட்சிக்கரத்தை இந்நேரம் உருட்ட ஆரம்பித்திருப்பார்கள். நல்ல வேளை, நாம் செய்த பூஜாபலன் நமது உயிரும், நமது மன்னர் உயிரும் காப்பாற்றப்பட்டதோடு கயவர்கள் பிடியில் நாடு சிக்காமலும் மீட்கப்பட்டது. அவையோர்களே! புயலுக்குப்பின் எழுந்துள்ள அமைதியான நிலைமையை நினைந்து ஆறுதல் பெறு வது ஒருபுறமிருக்கட்டும், புயல் கிளம்பியதற்குக் காரணமாயிருந்த இந்தப் புரட்சிக்காரனை - விடுதலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/131&oldid=1703680" இலிருந்து மீள்விக்கப்பட்டது