உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஒரு காலத்தில் பெண்கள்தான் நாட்டினுடைய கண்களாக இருந்தார்கள். ஒரு காலத்திலே ஒளவை போன்ற கவிஞர்களும்; அவரைப்போன்ற பல தமிழ்ப் பெண்மணிகளும் கவிதா மண்டலத்தைத் தருகின்ற வர்களாக இருந்தார்கள். கையினில் வாளெடுத்துப் போர்புரியவும். சூளுரைத்து நாடு காக்கவும், தங்க ளுடைய நாட்டுக்குத் தேவையான நல்ல காரியங் களிலே ஈடுபடுகிறவர்களாயும் பெண்கள் இருந்தார் கள் என்பதை எடுத்துரைக்கின்ற புறநானூறு செய் யுள்கள் நம்மிடத்திலேதான் இருக்கின்றன. அந்தப் பெண்களுடைய புகழை உயர்த்துகிறது அகமும்- புறமும் - கலிங்கத்துப்பரணியும்-சங்க இலக்கியங் களும்-சிலப்பதிகாரமும், இத்தகைய அருமையான பைந்தமிழ் பனுவல்களை எல்லாம் பெற்றிருக்கிற தமிழகம், பெண்களால் உயரவேண்டும். நாட்டி னுடைய கண்களாகிய பெண்கள் தமிழகத்தினுடைய ஒளி விளக்குகளாகத் திகழ்ந்து, தங்களுடைய சந்த தியை இந்த நாட்டு மன்னர்களாக ஆக்குவதிவே முனையவேண்டும். "தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் " என்று கூறுவார்கள். தொட்டிற் பழக்கத்திலேயே நல்ல வீரர்களை உற்பத்தி செய்கின்ற அந்தப் பண்பை வருங்காலத்திலே தரவேண்டிய பெண்கள் அதற் கான நல்ல கருத்துத் தெளிவை இப்போதே பெற வேண்டும், என்று கேட்டுக்கொண்டு அந்தப் 'பெண் சமுதாயம் வாழ்க! அவர்கள் பணி புரியும் இந்தப் பாசறை வாழ்க! இந்தப் பாசறைக்கு ஆக்கமளிக் கிற பெரியவர்கள் அனைவரும் வாழ்க! வாழ்க!!" என வாழ்த்துகிறேன். (கொடவாசல் "பாரத் சேவக் சமாஜ்" 26-5-'57)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/130&oldid=1703679" இலிருந்து மீள்விக்கப்பட்டது