உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 ளர்கள் நாட்டிலே இருக்கிறார்கள். கனியை விட்டு விட்டுக் காயைப் பறிக்கிற பேச்சாளர்கள் பல மேடை களிலே ஏறுகிறார்கள். அந்தப் பரிதாபமான அபாக்யமான - துர்ப்பாக்யமான நிலைமையை இந்த நாட்டுப் பொதுமக்கள் பலப் பல நேரங்களிலே அனு பவிக்கவே வேண்டியிருக்கிறது. ற க ன் கனி பொழிகின்ற பேச்சாளர்கள் தமிழக மெங்கி லும் இருக்கிறார்கள், அவர்களுக்கு வழிகாட்டி "காஞ்சி யிலே" இருக்கிறார்கள் - அத்தகைய பேச்சாளர்கள் - அந்தக் கனிமூலம் கருத்தைத் தருகின்ற பேச்சாளர்கள் -பேச்சைத் தங்களுடைய கலையாக வைத்துக் கொண்டு, அந்தக் கலை மூலம் நாட்டுக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லுவதும்; "கலை யும் - மனிதனும்" என்ற பொருளுக்குக் கீழ் நிச்சய மாக அடங்கும் என்கின்ற காரணத்தால் அதை நா சொல்லத் துணிகின்றேன். இந்த அளவிலே கலை, மனிதனுக்கு நாகரீகப் பாதையில் செம்மையோடு நடக்க மிக மிகத் தேவைப்படுகிற ஒன்று என்பதை உங்களிடத்திலே கூறிக்கொண்டு, "அந்தக் கலை வாழ்க! அந்தக்கலை கருத்தோடு வளர்க ! அந்தக்கலை செழித்து ஓங்குக!" என்று கூறி சமூகப்பணி புரிகின்ற சகோதரிகள் கலைப் பணியையும் தங்களுடைய பணி களிலே ஒன்றாகக் கருதி - தேனிலே மருந்து கலந் திடுதல் போல், கலைப்பணியோடு நல்ல நல்ல கருத் துக்களைக் குழைத்துத் தருவார்களேயானால், நாட் டுக்கு நல்லதோர் சேவை புரிந்தவர்கள் ஆவார்கள். சேவைபுரிவதிலே தேர்ந்தவர்கள் ஆகவேதான் இந்தப் பணிபுரியும் பாவையர் முகாம் மிக மிக நாட்டுக்கு அவசியமாகின்ற ஒரு முகாம். . பெண்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/129&oldid=1703678" இலிருந்து மீள்விக்கப்பட்டது