உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 128 களைச் சொல்ல வேண்டும் என்பதையும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இவர்கள் பேச்சாளர்கள்; இந்தப் பேச்சுக் கலையால் என்ன சாதித்துவிடமுடி யும்?' -- கேட்டார்கள் தேர்தல் நேரத்திலே! இப் போதும் கேட்பார்கள். ஆனால், அந்த பேச்சுக்கலையைப் பற்றி வள்ளுவர் சொல்லுகிறார் - இங்கே பாடிக்கூடக் காட்டினார்கள். "வில்லேருழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேருழவர் பகை" வில்பிடித் திருக்கும் வீரனுடைய பகையைக் கொண்டாலும் கொள்ளலாம்; சொல்லால் அடிக்கின்ற அந்த உழவன் இருக்கிறானே பேச்சுக் கலையிலே வல்லவன் - - CON பேச்சாளன் - அவனுடைய பகையை னிய உளவாக உளவாக இன் கவர்ந்தற்று 9 99 யாரும் கொள்ளாதீர்கள் என்ற அறிவுரையை வள்ளுவர் சொல்லியிருக்கிறார். நாங்கள் சொல்லே ருழவர்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லிவிடலாமா? - என்றால், அதற்கும் திரு வள்ளுவர் கூறுகிறார், "இனிய னாத கூறல் கனியிருப்பக் காய் மேடையிலே பேசுகிறவர்கள் எல்லாம், பேச்சாளர் கள் அல்ல; அதிலே காய் பறிப்பவர்களும் இருக் கிறார்கள். மேடையிலிருந்து மற்றவர்களை வசைமாரி பொழிகிறவர்களும், இவர்கள் இன்ன ஜாதியினர் ; இவர்கள் இன்னாருக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் இப்படிப்பட்டவர்கள் ; இவர்கள் அதைச் செய்தார் கள்; இதைச் செய்தார்கள் என்று தனிப்பட்ட முறை யிலே தாக்குபவர்களும் பேச்சாளர்கள் என்றுதான் சொல்லப்படுகிறார்கள் நாட்டிலே அதே நேரத்திலே 'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்ற குறளை உணர்ந்த பேச்சா 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/128&oldid=1703677" இலிருந்து மீள்விக்கப்பட்டது