உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 போராட்டத்தின் துணைத் தளபதிகளாக ஆக்குங்கள் என்பதுதான். மார்பிலே வேல் தாங்கி மரணத்தை அணைப்போமே தவிர மாற்றாரிடம் சரண்புக மாட் டோம். மாணிக்கக் கொள்கைகளை எதிரிகட்குக் காணிக்கையாக்க மாட்டோம். இந்த உறுதியோடு இன்றைய மாநாட்டுக்குத் தலைமை வகிக் தான் கிறேன். . தென்னிந்திய நலஉரிமைச் சங்கமாக, ஜஸ்டிஸ் திராவிடர் கழகமாக திராவிட முன் கட்சியாக - - னேற்றக் கழகமாக நாம் வளர்ந்திருக்கிறோம். ஒவ் வொரு மாறுதலின்போதும், ஒவ்வொரு புதுமை ஏற்பட்டு வந்திருக்கிறது. சுயமரியாதைக் கொள்கை களை தேயவிடாமல் - சுயநலத்திற்காக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தொண்டுபுரிந்த சுத்த வீரர்கள்தான் இன்று அணிவகுத்து நிற்கிறோம். ஆனால் *இன்றைய மாறுதல் - அதாவது சென்ற ஆண்டு நமது இயக்கத்தில் ஏற்பட்ட மாறுதல் நாமா கத் தேடிக்கொண்டதல்ல. நமக்குத் தலைவராயிருந்த பெரியார் அவர்கள் கட்டாயப்படுத்தித் திணித்தது. செப்டம்பர் பதினேழு! நாம் மறக்க முடியாத நாள் ! பெரியார் அவர்கள் பிறந்த நாள். பெரியார் அவர்கள் பிறந்த நாளும் - நாம் அவர்களை விட்டுப் பிரிந்த நாளும் அதுதான். சிந்திய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மீண்டும் செயலில் இறங்கப் புறப்பட்ட நாள் - சிங்காரச் சென்னையிலே-புழுங்கிப் போன நமக்குப் புதுவாழ்வு சித்தரித்த நாள் ! அந்த நாள் திராவிடம் உள்ளளவும் கொண்டாடப்பட வேண்டிய அருமைமிகு நாள்! அந்நாள் தோன்றி ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/147&oldid=1703696" இலிருந்து மீள்விக்கப்பட்டது