உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மேற்பட்ட பிரச்சாரக் காளையர்கள், அன்றாடக் கூட்டங்கள். மாவட்டந்தோறும் மாநாடுகள். இது தித்திப்பான செய்திதான். ஆனால், பூரண திருப்தி யளிக்கக் கூடியதல்ல. பல ஆண்டுகளாக இதைத்தான் செய்து பழக்கப் பட்டிருக்கிறோம். மேடைகள் அமைப்பதும் - பேச் சாளர்களை அழைத்து மேகமண்டல மதிரப் பேசச் செய்வதும் - அதன் விளைவாகப் பெரும் பகுதியினரை நம்மவராக்குவதும் தேவையற்ற வேலை யென்று கூறவில்லை. நம் கொள்கையைக் கீ தமாக்கிக் கொண்டவர்கள் - நம் பாதையில் நடந்து வரத் துணிந்தவர்கள் - நாலாபக்கங்களிலும் சிதறிக் கிடக் கிறார்கள். அவர்களை இணைக்க முடியவில்லை. இணைக் கும் முயற்சி எடுத்துக் கொள்ளப்படவில்லை. -நம் ஐந்நூறு கிளைகள். அந்தக் கிளைகளுக்கும், மத்ய கழகத்திற்கும் தொடர்பு அறுந்துதான் போயிருக்கிறது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் -- அந்தத் திட்டம் தீட்டப்பட்ட பிறகு - மத்ய கழகத்திலிருந்து மாவட்டக் கழகத் திற்குச் சென்று - மாவட்டக் கழகம் கிளைக் கழகங் களுக்கு அறிவித்து. கிளைக்கழகம் அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஏற்பாடு இருக்கிறது. ஆனால், முறைப்படி நடக்கவில்லை. தலைமைக் கழகம் ஒரு சங்கிலியின் பதக்கமாகவும் கிளைகள் முத்துக்களாகவும் கோக்கப்படவில்லை. இந்தக் குறையை விரைவில் களைய வேண்டும். இந்த இணைப்பு உறுதியாக இருந்தால்தான் கிளைக் கழகத்தின் சந்தேகங்கள் - - நடவடிக்கைகள் இவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/150&oldid=1703699" இலிருந்து மீள்விக்கப்பட்டது